புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆங்கிலோ இந்தியன் கலக்கிய 5 படங்கள்.. சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரசகுல்லா

Actor Siva Karthikeyan: தன் நடிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காதா என்று தமிழ் சினிமாவில் முயற்சித்து என்ட்ரி கொடுத்த ஹீரோயின்கள் ஏராளம். இந்நிலையில் ஆங்கிலோ இந்தியனாய் இருந்தும் மொழி பிரச்சனையை பெரிதும் கருதாது இறங்கி அசத்திருப்பார்கள்.

மேலும் தனக்கு கிடைத்த வரவேற்பை கொண்டு அடுத்த அடுத்த படங்களில் வாய்ப்பையும் பெற்று இருப்பார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் கலக்கிய 5 ஆங்கிலோ இந்தியனை பற்றி இங்கு காண்போம்.

Also Read: முதல் படத்திலேயே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. ஆடியன்ஸ்களை மிரள வைத்த ‘போர் தொழில்’

எமி ஜாக்சன்: 2010ல் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மதராசபட்டினம். இப்படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்கும் எமி ஜாக்சன், மெட்ராஸ் கலாச்சாரத்தை விரும்பி அவற்றை ஏற்று, ஆர்யாவுடன் இணைந்து வரும் காட்சியில் சிறப்புற நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து தமிழில் அடுத்த கட்ட பட வாய்ப்புகளாக ஐ, தெறி, 2.0 போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புருனா அப்துல்லா: பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா 2 வில் இடம் பெற்று இருப்பார். இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், இப்படத்தில் சமீரா என்னும் சின்ன கதாபாத்திரத்தில் வாய்ப்பு பெற்று நடித்திருப்பார். மேலும் பிரபலமான அஜித் உடன் இணைந்து நடித்த பெருமையை பெற்ற இவர் அதன்பின் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ப்ராஜெக்ட் கே நடிகர் நடிகைகளின் ஒட்டு மொத்த சம்பள லிஸ்ட்.. பிரபாஸை விட கமலுக்கு இவ்வளவு கம்மியா!

சன்னி லியோன்: இளசுகளின் கனவு கன்னி ஆன இவர் பாலிவுட் நடிகை மற்றும் தொழிலதிபர் ஆவார். பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்பொழுது தமிழ் படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வாறு வடகறி என்னும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடனம் ஆடியிருப்பார். அதை தொடர்ந்து மதுர ராஜா, ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் வீரமாதேவி என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.

மெலனி மேரி: ஆஸ்திரேலியன் மாடலான இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கோவா படத்தில் இடம் பெற்றிருப்பார். அதிலும் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றவாறு இவர் மேற்கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இப்படத்தில் பிரேம்ஜியின் ஜோடியாக மேற்கொண்ட கேரக்டருக்கு பிறகு இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராமர் சோலியை முடித்து அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரபாஸ்.. ப்ராஜெக்ட் கே-ல் எடுக்க போகும் அவதாரம்

மரியா ரியாபோஷப்கா: உக்கிரன் நாட்டை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் ஆர்வம் கொண்டு முயற்சித்த படம் தான் பிரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் தமிழில் பேசியும் மற்றும் குத்து பாடலுக்கு நடனமாடியும் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார். இருப்பினும் இப்படம் அவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News