திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் போல் பல கெட்டப்புகளை போட்டு நடித்த அஜித்தின் 5 படங்கள்.. கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த ஒரு கேரக்டர்

Actor Ajithkumar: பொதுவாக கமலுக்கு சினிமாவில் என்சைக்ளோபீடியா என்ற பெயரும், எல்லா விஷயங்களையும் கற்றுத் தெரிந்த ஞானியாகவும் பெயரெடுத்து இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் நடிக்கும் படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி பல கெட்டப்புகளை போட்டு நடிப்பதில் இவரை மிஞ்சியது யாருமில்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார்.

ஆனாலும் இவருக்கு இணையாக அஜித் பல கெட்டப்புகளை போட்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அப்படி இவர் நடித்த சில படங்களில் இவருடைய கேரக்டரை பார்த்து பலரும் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் நடிப்பினு வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் தான் என்று நடித்து வருகிறார். அப்படி கமல் போல் பல கெட்டப்புகளை போட்டு நடித்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: பழைய செல்வராகவன் கதையை நோண்டி எடுத்த தனுஷ்.. அஜித் மறுத்ததால் 3 ஹீரோ சப்ஜெக்ட்க்கு தயாராகும் ஹீரோக்கள்

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் தம்பி மனைவியான சிம்ரன் மீது தீராத காதல் கொண்டு இவரை அடைவதற்காக பல சதி வேலைகளை செய்யக்கூடிய தேவா கேரக்டரில் நடித்திருப்பார். அதுவும் காது கேளாதவராகவும், வாய் பேச முடியாத அளவுக்கு தன்னுடைய நடிப்பை கொடுத்து கலக்கி இருப்பார்.

அடுத்ததாக சிட்டிசன் படத்தில் ஒரு ஊருக்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக பல திட்டங்களை போட்டு அதிகாரிகளை தண்டிக்கும் விதமாக அவதாரம் எடுக்கும் சிட்டிசனாக நடித்திருப்பார். மேலும் வரலாறு படத்தில் பரதநாட்டியம் ஆடும் கலைஞராக தத்ரூபமாக தன்னை மெருகேற்றி அதற்கு தகுந்தார் போல் நடிப்பை கொடுத்திருப்பார்.

Also read: கைகுலுக்கிய பின் டெட்டாலில் கை கழுவிய அஜித்.. தேவையில்லாத சர்ச்சையை கிளப்பிய விஷமிகள்

இதற்கு எத்தனையோ நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வித்தியாசமான முறையில் நடித்துக் காட்டி இருப்பார். அடுத்து வில்லன் படத்தில் ஊனமுற்றவராக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு அவர்கள் படும் ரண வேதனையை எடுத்துச் சொல்லும் படமாக அஜித் இதில் நடித்திருப்பார்.

அடுத்தபடியாக அஜித்துக்கு ஒரு மாஸ் படமாக அமைந்தது மங்காத்தா. இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய கேரக்டரில் மிக முக்கியமான படமாக இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. நெகடிவ் ரோலில் நடித்தாலும் மாஸ் ஹீரோவாக மாபெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு அஜித்திற்கு மிக திருப்புமுனையாக அமைந்தது.

Also read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

Trending News