திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹீரோக்களை கதறவிட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.. அமுதனாக உலக நாயகனையே பதறடித்த வில்லன்.

நடிகர் டேனியல் பாலாஜி தனக்கே உண்டான பாணியில் தனது படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். அதிலும் தனது கொடூரமான பார்வையாலேயே அனைவரையும் கொலை நடுங்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படியாக டேனியல் பாலாஜி வில்லனாக நடித்து ஹீரோக்களையே கதற விட்ட 5 படங்களை பற்றி  இங்கு பார்க்கலாம்.

பொல்லாதவன்: வெற்றிமாறன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு தனுஷ் உருவான திரைப்படம் பொல்லாதவன். இதில் தனுஷ், டேனியல் பாலாஜி, கிஷோர், ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படம் ஆனது பைக் திருட்டு சம்பந்தப்பட்ட கதையினை மையமாக வைத்து வெளிவந்ததாகும். இதில் டேனியல் பாலாஜி வில்லனாக ரவி என்னும் கதாபாத்திரத்தில் தனுஷையே அலைய விட்டிருப்பார்.

Also Read: குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்

பைரவா: பரதன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பைரவா. இதில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தின் கதை ஆனது மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஊழலை மையமாக வைத்து வெளிவந்ததாகும். இதில் டேனியல் பாலாஜி, கோட்டை வீரன் என்னும் வில்லன் ரோலில் தளபதி விஜயையே பந்தாடியிருப்பார்.

பிகில்: அட்லி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்  பிகில். இதில் விஜய் உடன் நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படம் ஆனது விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் டேனியல் பாலாஜி தனக்கே உண்டான வில்லத்தனத்தில் படுமாஸாக நடித்திருப்பார்.

Also Read: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தளபதியின் முரட்டு வில்லன்.. உதவிக்கரம் நீட்டிய விஜய், யாஷ்

வை ராஜா வை: ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வை ராஜா வை. இதில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக்,  டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் தனது அபார திறமையை தவறான முறையில் பயன்படுத்துவதை மையமாக இப்படத்தின் கதையானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்தில்  டேனியல் பாலாஜி சூதாட்டம் நடத்தி வரும் ரங்கராஜன் என்னும் கதாபாத்திரத்தில்  தரமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருப்பார்.

வேட்டையாடு விளையாடு: கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு கமல்  நடிப்பில் உருவான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இதில் கமல்ஹாசன் உடன் ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் மர்மமான முறையில் நடக்கும் கொலைகளையும், அதற்கான காரணங்களையும் கண்டுபிடிப்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்தில் டேனியல் பாலாஜி மருத்துவம் படித்த ஒரு சீரியல் கில்லர் ஆக அமுதவாணன் என்னும் கேரக்டரில் உலக  நாயகனையே பதறடிக்க வைத்திருப்பார்.

Also Read: இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

Trending News