செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரம்மாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய கேடி.குஞ்சு மோகனின் 5 படங்கள்.. இப்ப வர பிரபுதேவா உருட்டும் ஒரே படம்

KT Konju Mohan Produced Movies: சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஒரு வாய்ப்பு இருந்தால் மட்டுமே அவர்களால் முன்னேற முடியும். அந்த வகையில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரம்மாண்டமான படங்களை எடுக்க வைத்த கேடி குஞ்சு மோகனின் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜென்டில்மேன்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், மதுபாலா, சுபஸ்ரீ, கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது பணக்காரர்களிடம் இருக்கும் அளவு கடந்த சொத்தில் பாதி திருடி ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் உதவக்கூடிய படமாக வெளிவந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

Also read: ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

சூரியன்: இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சூரியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ரோஜா, கவுண்டமணி, மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சரத்குமார், ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் பொழுது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து தன்னை நிரூபிப்பதற்காக சிறையிலிருந்து தப்பி இவருக்கான நியாயத்தை சொல்லும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் சரத்குமாருக்கு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக அமைந்தது.

காதல் தேசம்: இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் வினீத், அப்பாஸ், தபு, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நட்புக்கும் காதலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அழகான உணர்வை வெளிப்படுத்தி காட்டப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று மிகப்பெரிய லாபத்தை கொடுத்திருக்கிறது.

Also read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

ரட்சகன்: பிரவீன் காந்தி இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் நாகர்ஜுனா, சுஷ்மிதா சென், வடிவேலு, ரகுவரன், எஸ்பிபி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நாகர்ஜுனா மிகவும் கோபக்காரனாகவும், முரட்டுத்தனமாகவும் இருப்பார். பிறகு இவருக்கு ஏற்பட்ட காதலால் இவருடைய அத்தனை உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் விதமாக இக்கதை நகரம். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சனம் வெற்றி பெற்றது.

காதலன்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படம் வெளிவந்தது.  இதில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ்பிபி, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிரபுதேவாவுக்கும் நக்மாவிற்கும் இடையில் ஏற்பட்ட அருமையான காதல் உணர்வுகளை காட்டி ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த படமாக தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. பிரபுதேவா ஹீரோவாக நடித்த படங்களில் இது அவருக்கு பெஸ்ட் படம் என்று சொல்லலாம். இப்படம் வெளியாகி வணிகரீதியாக வெற்றி பெற்றது.

Also read: நயன்தாராவுக்கு முன் வாரிசு நடிகையை வெறித்தனமாக காதலித்த பிரபுதேவா.. நாட்டாமை என்ன செஞ்சாரு தெரியுமா?

Trending News