ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

72 வயதிலும் சமீபத்தில் ஹிட்டு கொடுத்த மம்முட்டியின் 5 படங்கள்.. ஜோவுடன் அசத்திய காதல் தி கோர்

Actor Mammootty Recent 5 Hit Movies: மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் மம்முட்டி, தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் தேவராஜ் ஆக நடித்ததின் மூலம் பரீட்சியமானார். 72 வயதாகும் மம்மூட்டியை அவருடைய ரசிகர்கள் செல்லமாக ‘மம்முக்கா’ என்று அழைப்பார்கள். இவருக்கு போட்டியாக இவர் மகன் சினிமாவிற்கு வந்த பிறகும், தொடர்ந்து கதாநாயகனாக மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து 5 ஹிட்ஸ் கொடுத்திருக்கிறார்.

பீஷ்ம பர்வம்: இந்தப் படத்தில் மம்முட்டியை ஒரு தாதாவாக காட்டினர். இந்த படத்தின் கதை பழைய ‘காட்பாதர்’, ‘நாயகன்’ படம் போன்றே இருந்தது. இருப்பினும் படத்தில் மம்முட்டியின் நடை, உடை, ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவை இந்த படத்திற்கு முக்கிய பங்கு வகித்தது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த படங்கள் வெளியான நேரத்தில்தான், இன்னும் கதாநாயகன் தான் என பல இடங்களில் மம்முக்கா தன்னை நிரூபிக்கிறார். குறிப்பாக இந்த படத்தின் சண்டைக் காட்சிகளிலும், வில்லன் தன்னிடம் பேரம் பேச வரும்போது ‘வெளியே போ’ என்று துரத்தும் காட்சிகளிலும் செம மாஸ் லுக் விட்டு கலக்கினார்.

ரோர்சாக்: தனக்கு ஏற்பட்ட பெருங்கொடுமையால் பழிவாங்கும் எண்ணம் உடல் முழுக்க ஊறிப்போன ஒருவரின் தீரா பழி வேட்டையே ‘ரோர்சாக்’. இந்த படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், நான் லீனியர் முறையில் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைக்கதையாக்கிய விதம் இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. இதில் மம்முட்டியின் சைக்கோ தனமான நடிப்பை பார்க்க முடிந்தது.

Also Read: வசூல் மழையில் காதல் தி கோர்.. 3வது நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

மம்மூட்டி நடிப்பில் அடுத்தடுத்து வெற்றி கண்ட 5 படங்கள்

நண்பகல் நேரத்து மயக்கம்: கடந்தாண்டு மம்முட்டி தயாரித்து நடித்த நண்பகல் நேரம் மயக்கம் திரைப்படமானது மலையாளம், தமிழ் மொழிகளில் ரிலீசானது. டூர் செல்லக்கூடிய பயணிகளுக்கு குழு வழி மாறி கேரளாவிற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் ஒரு சில பிரச்சினைகள் சிக்கி வீடு திரும்புவது தான் இந்த படத்தின் கதை. இதில் மம்முட்டியின் வெகுளித்தனமான நடிப்பை பார்க்க முடிந்தது.

கண்ணூர் ஸ்க்வாட்: கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான க்ரைம் திரில்லர் படம் தான் கண்ணூர் ஸ்குவாட். இந்தப் படம் குற்றப்புணர்வு பிரிவான கண்ணூர் படையின் ஒரு பகுதியாக இருந்த காவல்துறை அதிகாரிகள் குழுவின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மம்முக்காவின் நடிப்பு மிரட்டும் வகையில் இருந்தது.

காதல் தி கோர்: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் மம்முட்டி, ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ என்ற படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஒரு படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்ததால் வசூலிலும் பட்டையைக் கிளப்பியது.

இந்த படத்தில் மம்முட்டியின் ஜோதிகாவும் திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில், அரசியல் ஆசை காரணமாக மம்மூட்டி எடுக்கும் முடிவுக்கு எதிராக அவரது மனைவி ஜோதிகா விவாகரத்து பெற முடிவெடுக்கிறார். இதனால் அவர்களின் மகள் மற்றும் மகன் அடையும் மன உளைச்சல் உள்ளிட்ட விவகாரங்களை படமாக இயக்கி உள்ளார் ஜோ பேபி. இதில் மம்மூட்டியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Also Read: Kadhal The Core Movie Review- சர்ச்சை கதையில் துணிச்சலாக நடித்துள்ள மம்முட்டி, ஜோ.. காதல் தி கோர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Trending News