திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரீ ரிலீஸ் செய்தால் இன்றும் உட்கார வைக்கும் ரஜினியின் 5 படங்கள்.. பெயர் சொல்லும் படமாய் மாறிய பில்லா

Actor Rajini: அக்காலம் முதல் இக்காலம் வரை தனக்குரிய ஸ்டைலால், மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. தன் எதார்த்தமான நடிப்பால் இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இவர் தன் ஸ்டைலான, நடிப்பால் வெற்றி கண்ட படங்கள் ஏராளம். அவ்வாறு இவரின் படங்களை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் அவற்றை பார்க்க ஆள் உண்டு. அதுபோன்று அமைந்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: மேடையில் அவ்வளவு பேசிட்டு கமலுக்காக காத்துக் கிடந்த மாரி செல்வராஜ்.. மாமன்னன் ஆண்டவர் விமர்சனம்

தில்லு முல்லு: 1981ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த காமெடி படம் தான் தில்லுமுல்லு. இப்படத்தில் ரஜினி அண்ணன் தம்பியாக இரு மாறு வேடத்தில் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் தேங்காய் சீனிவாசனும் ரஜினியும் இணைந்து கலக்கிய நகைச்சுவை காட்சிகள் இன்றும் பெரிதாய் பேசப்பட்டு வருகிறது.

மூன்று முகம்: 1982ல் ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் தான் மூன்று முகம். இப்படத்தின் பெயருக்கு ஏற்ப மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. அதிலும் குறிப்பாக அலெக்ஸாண்டர் கதாபாத்திரம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. ரஜினியின் வெற்றி படங்களில் இப்படமும் ஒன்று.

Also Read: வாடிவாசலுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை.. சூர்யாவுக்கு கட்டம் சரியில்லையோ

ஆறிலிருந்து அறுபது வரை: 1979ல் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆறிலிருந்து அறுபது வரை. இப்படத்தில் ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், ஜெயலட்சுமி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரு ஏழையின் போராட்டத்தை உணர்த்தும் கதாபாத்திரத்தில் ரஜினி சிறப்புற நடித்திருப்பார்.

பில்லா: டான் படத்தின் ரீமேக் படமான பில்லா 1980ல் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்தது. இரு வேடத்தில் ரஜினி, ஸ்ரீபிரியா, அசோகன், மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் ரஜினியின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

Also Read: சிவகார்த்திகேயன் போல் கடனில் தவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்த பரிதாபம்

தீ : 1981ல் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தீ. இப்படத்தில் ரஜினி, சுமன், ஸ்ரீபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் எதார்த்தமான கதையை உணர்த்தும் கதாபாத்திரத்தில் ரஜினி சிறப்புற நடித்திருப்பார். இப்படங்களை தொலைக்காட்சியில் இன்று போட்டாலும், மக்கள் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு சிறப்புடையதாகும்.

Trending News