Actor and Villan Sathyaraj: சினிமாவில் ஏதாவது ஒரு சின்ன ரோல் கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருந்த சத்யராஜுக்கு ஹீரோக்கு அடியாளாக வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இவருடைய வில்லத்தனமான பேச்சால் ஒரு சில படங்களிலே மெயின் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது வரை முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
சட்டம் என் கையில்: டி.என்.பாலு இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மெயின் வில்லனாக தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பார். இவருடைய அடியாளாக முதன்முதலில் சத்யராஜ் இப்படத்தில் அறிமுகமானார்.
Also read: சினிமாவில் ஈகோ பார்க்காத ஒரே நடிகர்.. சத்யராஜ் உடன் பட்டையை கிளப்பிய காம்போ
நூறாவது நாள்: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு நூறாவது நாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், மோகன், நளினி, தேங்காய் சீனிவாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ், ஜெகநாதன் என்ற கேரக்டரில் முரட்டு வில்லனாக ஹீரோக்கு இணையாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
24 மணி நேரம்: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு 24 மணி நேரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மோகன், சத்யராஜ், நளினி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ் பார்க்க பக்கா வில்லனாக இவருடைய கெட்டப்பை மாற்றிக்கொண்டு, பெண்களை துன்புறுத்தி நடித்திருப்பார். இப்படத்தில் தான் இவருடைய ஃபேமஸான டயலாக் ஆன, என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்களே என்று அடிக்கடி சொல்லி இருப்பார்.
Also read: வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்
மிஸ்டர் பாரத்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மிஸ்டர் பாரத் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, சத்யராஜ், அம்பிகா, சாரதா மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சத்யராஜ் ஒரு கிராமத்துப் பெண்ணை நம்ப வைத்து திருமணம் செய்து கொள்வதாக பழகிய பின்பு ஏமாற்றிவிட்டு போய்விடுவார். இதை தெரிந்த ரஜினி தன் அம்மாவிற்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் அவரை பழி வாங்குவதற்காக முயற்சி எடுப்பார். இதில் சத்யராஜ் ஒரு வில்லனாக எந்த அளவுக்கு நடிக்க முடியுமோ அதற்கு இணையாக இவருடைய கதாபாத்திரத்தை நடித்திருப்பார்.
அமைதிப்படை: மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு அமைதிப்படை திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் தந்தையாக அம்மாவாசை கேரக்டரிலும், மகனாக இன்ஸ்பெக்டர் தங்கவேல் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் அம்மாவாசை என்கிற சத்யராஜ் அரசியல்வாதியாக இவருடைய உச்சகட்ட வில்லத்தனத்தை மகனிடமே காட்டி அமாவாசை கேரக்டரை மக்கள் மனதில் பதித்திருப்பார்.
Also read: விஜய் சேதுபதி இடத்துக்கு கச்சிதமாக பொருந்தும் சத்யராஜ்.. வெற்றி படத்தின் இரண்டாம் பாகம்