ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2 கோடி போட்டு 35 கோடி வசூலை பார்த்த விஜய் சேதுபதி.. கம்மி காசுல பெத்த லாபம் பார்த்த 5 படங்கள்

Vijay Sethupathi Low Budget Movies: விஜய் சேதுபதியின் தனித்துவமான நடிப்பாலும், எதார்த்தமான பேச்சாலும் பல படங்களில் வெற்றி நடை போட்டு வருகிறார். அதுவும் ஒரு மாசத்திற்கு குறைந்தது 10 படங்கள் என நடிப்பதில் இவரை மிஞ்சுவது யாருமில்லை. அந்த அளவிற்கு பட வாய்ப்புகளை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். இவருடைய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிகமாக லாபத்தை அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு எதிர்பாராத நடந்த விபத்தினால் பழைய விஷயங்கள் எதுவும் ஞாபகத்துக்கு இல்லாமல் அவ்வப்போது குழப்பத்திலேயே இருப்பது போல் கதை நகரும். அத்துடன் இவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 6 கோடி லாபத்தை பெற்றது. ஆனால் இப்படம் 80 லட்சம் செலவில் மட்டுமே உருவாக்கப்பட்டது.

பீட்சா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு பீட்சா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பிசன் நடிப்பில் ஒரு திரில்லரான கதையாக அமைந்திருக்கும். அதாவது இல்லாத ஒரு பேயை இருக்கிற மாதிரி சுற்றி இருக்கிறவர்களை நம்ப வைப்பது இப்படத்தின் கதையாகும். இப்படம் 1.5 கோடி செலவில் எடுக்கப்பட்டு 8 கோடி வரை லாபத்தை பெற்றிருக்கிறது.

Also read: புஸ்வானமாய் போன அண்ணனால் ராக்கெட் மாதிரி கிளம்பும் தம்பி.. விஜய் சேதுபதியை வளைத்து ஆடும் ஆட்டம்

சூது கவ்வும்: நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நவீன சமூகத்தில் போலியான விஷயங்களை வைத்து ஏமாற்றும் நபர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட இப்படம் 2 கோடி செலவில் எடுக்கப்பட்டு 35 கோடி வரை லாபத்தை வசூலித்தது.

தர்மதுரை: சீனு ராமசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு தர்மதுரை திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எதார்த்தமான நடிப்பையும், குடும்பத்தில் இருப்பவர்களால்  ஏமாற்றமான சோகத்தையும் அழகாக காட்டி நடித்திருப்பார். அப்படிப்பட்ட இப்படத்தை எடுப்பதற்கு 13 கோடி செலவு செய்து இருக்கிறார்கள். ஆனால் 25 கோடி வரை வசூலில் லாபத்தை பெற்றிருக்கிறார்கள்.

சேதுபதி: எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு சேதுபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், பொறுப்பான அப்பாவாகவும், காதல் ரொமான்டிக் செய்யும் கணவராகவும் நடிப்பை பல்வேறு கோணத்தில் ரசிக்கும்படி கொடுத்திருப்பார். இப்படத்தை 2 கோடி செலவில் எடுக்கப்பட்டு 30 கோடி வரை லாபத்தை அடைந்திருக்கிறார்கள்.

Also read: விஜய் சேதுபதியை துரத்தி துரத்தி டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. செம கிரஷில் இருந்த 18 வயசு இளம் பிஞ்சு

Trending News