வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உடலை வருத்தி, விருது வாங்கியும் தோல்வியடைந்த விக்ரமின் 6 படங்கள்.. கெட்டப்பை அசிங்கமாக மாற்றிய லிங்கேசன்

Actor Movie: நடிகர் விக்ரம் தேர்வு செய்யும் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருக்கும். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இவரை மாற்றி, உடலை வருத்திக்கொண்டு நடிப்பதற்கு இவருக்கு நிகர் யாருமில்லை. அப்படி இவர் உடலை வருத்திய நிலையிலும் சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை கொடுத்திருக்கிறது. ஆனாலும் சில படங்களில் இவருடைய நடிப்புக்கு விருதுகளும் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

காசி: இயக்குனர் வினையன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு காசி திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், காவேரி, காவ்யா மாதவன், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம், அவருடைய பார்வையை இழந்து, கண்களை வித்தியாசமாக வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு நடித்திருப்பார். இதில் இவருடைய நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் அந்த அளவிற்கு உண்மையிலேயே கண் தெரியாத போல் நடித்திருக்கிறார். அதனால் தான் இப்படத்தில் இவருடைய நடிப்புக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.  ஆனால் வசூல் அளவில் இப்படம் அவர்களுக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

Also read: உச்சம் தொட்டாலும் அலட்டலும், ஆணவமும் இல்லாத 5 நடிகர்கள்.. எதையும் கொண்டாடாத விக்ரம்

பிதாமகன்: இயக்குனர் பாலா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பிதாமகன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம், வெட்டியான் என்ற கேரக்டரில் முகத்தையும் தோற்றத்தையும் அசிங்கமாக வடிவமைத்துக் கொண்டு இவருடைய நடிப்பை வியந்து பார்க்க வைத்தார். இவரோட நடிப்புக்கு பல விருதுகளை குவிந்தன. ஆனால் வசூல் அளவில் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் நஷ்டத்தை கொடுத்தது.

: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு ஐ திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ்கோபி, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம், லிங்கேசன் என்ற கேரக்டரில் பாடிபில்டராக நடித்திருக்கிறார். பிறகு வில்லன்களின் சூழ்ச்சியால் இவருடைய உடம்பை அசிங்கமாக மாறி இருக்கும். இவருடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு முகம் சுளிக்கிற அளவிற்கு கெட்டப்புடன் உடலை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார். இப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற ஃபிலிம்பேர் விருதை பெற்றார்.

Also read: வாணி போஜன் போல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட அவமானம்.. விக்ரம் படத்தால் அடுத்தடுத்து விழும் பெரிய அடி

கந்தசாமி: சுசி கணேசன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு கந்தசாமி திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், பிரபு, ஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் சிபிஐ அதிகாரியாக நடித்திருப்பார். இன்னொரு பக்கம் மக்களின் குறைதீர்க்கும் கந்தசாமி கேரக்டரில் ரொம்பவே சிரமப்பட்டு வித்தியாசமான கெட்டப்புடன் நடித்திருப்பார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

ராஜபாட்டை: சுசீந்திரன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ராஜபாட்டை திரைப்படம் வெளிவந்தது இதில் விக்ரம், தீக்ஷா சேத், தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம் ஜிம் பயிற்சியாளராக நடித்திருப்பார். இப்படம் விக்ரமின் சினிமா கேரியரில் மிகத் தோல்வியான படமாக அமைந்தது.

கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் கோப்ரா திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, ஸ்ரீநிதி செட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இரட்டை வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். ஆனால் இப்படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது.

Also read: எதிர்பார்த்த படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம்.. கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கண்டுக்காத அவல நிலை

Trending News