ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கவுண்டமணி ஜெயராம் காமெடியில் வெளிவந்த 5 படங்கள்.. சிறுசும் பெருசும் குஷ்பூ உடன் செஞ்ச ரகளை

என்னதான் ஹீரோவா இருந்தாலும் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ஜெயராம். இவர் நகைச்சுவை நடிகர்களான செந்தில், கவுண்டமணி ஆகியோருக்கு நிகராக இறங்கி அசத்திய படங்கள் ஏராளம்.

மேலும் ஜெயராம், கவுண்டமணி ஆகிய இருவரின் காம்பினேஷனில் வரும் காமெடிகள் காலம் கடந்தும் அழியாத மவுசு பெற்றவை. அவ்வாறு இருப்பின் இவர்கள் காமெடியில் வெளிவந்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: கங்கை அமரனை அசிங்கப்படுத்திய கவுண்டமணி.. பணத்திற்காக நன்றியை மறந்த கொடுமை

முறை மாமன்: 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் முறைமாமன். இவ்விடத்தில் (சிறுசு) ஜெயராம்,(பெருசு)கவுண்டமணி, குஷ்பூ, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை. மேலும் தன் அக்கா மீது கொண்ட கோபத்தை அவரின் மகளான குஷ்பூ மீது காட்டுவது போன்று கதை அமைந்திருக்கும். இப்படத்தில் இவர்களின் காமெடி ரகளைகள் அதே ஆண்டு வெளிவந்த மாமன் மகள் படத்தில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணியின் நகைச்சுவையை நினைவு கொள்ள செய்கிறது.

பெரிய இடத்து மாப்பிள்ளை: 1997ல் குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பெரிய இடத்து மாப்பிள்ளை. இப்படத்தில் கவுண்டமணி, ஜெயராம், தேவயானி, மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் கவுண்டமணி, ஜெயராமின் கோல்மால்கள் நகைச்சுவையாக அமைந்திருக்கும். மேலும் அவர்களின் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Also Read: நடிகையாக ஆசைப்பட்டு கடைசி வரை சின்ன வீடு என முத்திரை குத்தப்பட்ட நடிகை.. கவுண்டமணி முதல் ராதாரவி வரை விட்ட ஜொள்ளு

புது நிலவு: 1996ல் விஷ்ணு ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புது நிலவு. இப்படத்தில் ஜெயராம், வினிதா,ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் படத்தில் முக்கோண காதல் அமைப்பில் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். இதைத்தொடர்ந்து நகைச்சுவை பெரியளவு இல்லை என்றாலும் ஓரளவு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலா: 1994ல் நம்பிராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நிலா. இப்படத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ், கவுண்டமணி, செந்தில், வினிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை நடிகர்களான செந்தில், கவுண்டமணியின் காமெடியோடு ஜெயராமும் இணைந்து அசத்திருப்பார். மேலும் படத்தில் இவரின் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

Also Read: தெனாலி ஜெயராமனா இது? 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்துள்ளார் ஷாக் ஆகிடுவீங்க.! வைரலாகும் புகைப்படம்

பரிவட்டம்: 1996ல் டி கே ராஜேந்திரனால் இயக்கப்பட்ட படம் தான் பரிவட்டம். இப்படத்தில் ஜெயராம், சுகன்யா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் செந்தில், கவுண்டமணியின் நகைச்சுவை கூடுதல் வெற்றியை தேடித் தந்தது என்றே கூறலாம். ஆனாலும் இப்படம் பெரிதளவு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News