Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அக்கா மகனை நம்பி இறக்கிய விஜய் ஆண்டனி.. கைகொடுக்குமா மார்கன்

அக்கா மகனை நம்பி இறக்கிய விஜய் ஆண்டனி.. கைகொடுக்குமா மார்கன்

Vijay Antony : கடந்த வாரம் தனுஷின் குபேரா, அதர்வாவின் டிஎன்ஏ மற்றும் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் படங்கள் தியேட்டரில் வெளியானது. இந்த மூன்று படங்களுக்குமே ஓரளவு நல்ல வரவேற்பு தான் கிடைத்து வருகிறது. இந்த வாரம் […]

Vijay Antony : கடந்த வாரம் தனுஷின் குபேரா, அதர்வாவின் டிஎன்ஏ மற்றும் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் படங்கள் தியேட்டரில் வெளியானது. இந்த மூன்று படங்களுக்குமே ஓரளவு நல்ல வரவேற்பு தான் கிடைத்து வருகிறது.

இந்த வாரம் என்னென்ன படங்கள் தியேட்டரில் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதலாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கன் படம் வெளியாகிறது. அதாவது நகரம் முழுவதும் உள்ள குப்பை தொட்டிகளில் பெண்களின் உடல் கண்டெடுக்கப்படுகிறது.

அந்தக் கொலைக்கான மர்மம் மற்றும் விசாரணையை பின்தொடர்ந்து இந்த கதைகளும் உருவாகி உள்ளது. அடுத்ததாக விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவான லவ் மேரேஜ் படமும் இதே நாளில் வெளியாகிறது‌. இந்த படத்தை சண்முகப்ரியன் இயக்கியிருக்கிறார்.

ஜூன் 27 தியேட்டரில் வெளியாகும் படங்கள்

திருமணத்தை சுற்றியுள்ள சமூக அழுத்தங்களை உணர்ச்சி ரீதியாக வெளிப்படுத்தும் படமாக லவ் மேரேஜ் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் கௌரிஷ், ஸ்மேகா மணிமேகலை ஆகியோர் இயக்கத்தில் எஸ் எஸ் முருகராசு இயக்கத்தில் உருவான கடுக்க படமும் வெளியாகிறது.

விஜய் டிவி நாயகன் புகழ் நடிப்பில் மிஸ்டர் ஜுகீப்பர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். மே மாதமே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களினால் தள்ளிப்போனது. இந்த சூழலில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் கண்ணப்பா படமும் ஜூன் 27 வெளியாகிறது. முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய குமார், மஞ்சு விஷ்ணு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் குபேரா வசூலை விஜய் ஆண்டனியின் மார்கன் படம் முறியடிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.