வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் 5 படங்கள்.. தியேட்டரில் சோடை போனதால் ஒரே மாதத்தில் வந்த பிச்சைக்காரன் 2

Movie Pichaikkaran 2: சமீபகாலமாக தியேட்டரில் வெளியான படங்கள் சில மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடி நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை வாங்கி கொள்கிறார்கள். திரையரங்குகளில் அப்படம் நன்றாக ஓடினால் பல மாதங்கள் கழித்து தான் வெளியிடுகிறார்கள்.

அதில் சில படங்கள் தோல்வியுற்றால் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியான படங்களும் உண்டு. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் படங்களின் விவரங்களை பார்க்கலாம். இதில் கடந்த மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படமும் வெளியாகிறது.

Also Read : மணிரத்னத்தின் அடிமடியில் கைவைத்த விஜய் ஆண்டனி.. சம்பவம் செய்த பிச்சைக்காரன்-2

பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விஜய் ஆண்டனி இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் இப்படம் ரசிகர்களை கவர தவறியதால் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து சாந்தனு நடிப்பில் சமீபத்தில் இராவணக் கோட்டம் படம் வெளியாகி இருந்தது.

இப்படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் வசூலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. மேலும் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி சாந்தனுவின் இராணவக் கோட்டம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்கானா படமும் இதே நாளில் சோனி லைவ்வில் வெளியாகிறது.

Also Read : காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த படமும் தியேட்டரில் காற்று வாங்கியதால் சீக்கிரமாகவே ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்திற்காக தமன்னா ஜி கர்தா என்ற இணைய தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் இன்று வெளியாகுவதால் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் ரகுல் ப்ரீத்தி சிங் ஐ லவ் யூ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருடன் பவியல் குலாட்டி நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 16 ஆம் தேதி தளத்தில் ஜியோ சினிமாவில் வெளியாகிறது. இந்த படங்களை வீட்டிலேயே இருந்து ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

Also Read : மில்க் பியூட்டி தமன்னாவை வலையில் சிக்க வைத்த விஜய்.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டான்

Trending News