வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இன்று ரிலீஸாகும் 5 படங்கள்.. வாழ்வா சாவா போராட்டத்தில் அதர்வா

சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாக உள்ள ஐந்து படங்களை பார்க்கலாம்.

காட்டேரி : டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காட்டேரி. இப்படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோஸ் கிரீன் தயாரித்துள்ளது. காட்டேரி படமும் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பொய்க்கால் குதிரை : சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, ரைசா வில்சன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொய்க்கால் குதிரை. டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

சீதாராமம் : பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சீதாராமம். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்டிம் : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களான வெங்கட்பிரபு, சிம்புதேவன், பா ரஞ்சித், எம் ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் 4 வித்தியாசமான கதைக் களத்தோடு உருவாகி உள்ளது விக்டிம் ஆந்தாலஜி படம். இப்படத்தில் அமலாபால், பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, நாசர், நட்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சோனி லைவ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

குருதி ஆட்டம் : ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2018ல் ஆரம்பிக்கப்பட்டாலும் கோவிட் தொற்று போன்ற சில பிரச்சனைகளால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. மேலும் அதர்வாவின் படங்கள் சமீபகாலமாக ஓடாததால் இப்படத்தை நம்பி வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

Trending News