வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஓவர் தலைகனத்தால் சத்யராஜிடம் இருந்து பறிக்கப்பட்ட 5 படங்கள்.. தலை தெரிக்க ஓடிய இயக்குனர் ஷங்கர்

Actor Sathiyaraj: நடிகர் சத்யராஜ் கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பல பரிமாணங்களில் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லனாக நுழைந்து, பின்பு ஹீரோவாகி தனக்கென ஒரு அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். வயதானாலும் தற்போது வரை முக்கிய கதாபாத்திரத்தில் கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா மற்றும் லவ் டுடே படத்தில் வித்தியாசமான முறையில் காதலுக்கு ஆப்பு வைத்த அப்பாவாக சத்யராஜ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த காலத்தில் இவருடைய படங்களும் சரி, இவரின் ரேஞ்சும் ரொம்பவே டாப்பில் தான் இருந்தது.

Also read: வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

அதனாலேயே கொஞ்சம் ஓவர் தலைக்கனத்துடன் சுற்றி இருக்கிறார்ர். இதனால் இவரை தேடி வந்த படத்தின் வாய்ப்புகளும் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் முதலில் சத்யராஜ் தான் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது. ஆனால் இவருடைய கெட்ட நேரம் இந்த வாய்ப்பு இவரிடம் இருந்து நழுவி கமலுக்கு போய்விட்டது.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில் பாண்டியா கேரக்டரில் சத்யராஜுக்கு தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால் இவரிடம் இருந்த ஓவர் ஆட்டிட்யூட்டல் நடிகர் ஜீவனுக்கு இந்த வாய்ப்பு போய்விட்டது. இதனைத் தொடர்ந்து ஷியாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் பாதர் கேரக்டரில் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் இவருக்கு பதிலாக பசுபதி நடித்தார்.

Also read: எல்லாம் பத்தினிவிட்ட சாபம் தானா! அஜித்தை தவறாக வழி நடத்துகிறார்களா.? ஆட்டிப் படைக்கும் கெட்ட நேரம்

மேலும் அஜித் நடிப்பில் பக்கா மாஸாக வெளிவந்த திரைப்படம் தான் தீனா. இதில் ஆதி கேசவனாக சுரேஷ்கோபி நடித்திருக்கிறார். ஆனால் முதலில் இந்த வாய்ப்பு சத்யராஜுக்கு தான் போயிருந்தது. அந்த நேரத்தில் சத்யராஜ் ஹீரோவாக தான் நான் நடிப்பேன் என்று சொல்லி இவருடைய தலைகனத்தால் கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார்.

அதன் பின்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் இவருக்கு வில்லனாக சுமன் நடித்திருப்பார். இதில் முதலில் சத்யராஜுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது சத்யராஜ் பெரியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தி விட்டார். இதனால் இயக்குனர் ஷங்கர் இவர் பக்கம் வராமலேயே தலை தெரிக்க ஓடிவிட்டார். இப்படி சத்யராஜின் நடவடிக்கையால் இந்த படங்கள் அனைத்தும் இவரிடம் இருந்து கைநழுவி போயிருக்கிறது.

Also read: 500 கோடி வசூலித்தாலும், அது சாராயம் வித்ததுக்கு சமம்.. ரஜினி, விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குனர்

Trending News