புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குறட்டை, தூக்கம் என வித்தியாசமாக நகைச்சுவையோடு எடுத்த 5 படங்கள்.. காது கேளாமல் மாசு காட்டிய நயன்

படங்களில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் விதமாக கருத்து நிறைந்த ஸ்கிரிப்ட் அமைந்தால் அவை மக்களின் எதிர்பார்ப்பை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. அவ்வாறு மனிதனுக்கு ஏற்படும் குறைகளை நிறைவாக காட்டப்படும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அவ்வாறு தமிழ் சினிமாவில் காது கேட்காமல், குறட்டை, கொட்டாவி, தூக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமாக அமைந்த படங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதிலும் வித்தியாசமான பிரச்சனையோடு நகைச்சுவையை உணர்த்தும் விதமாக அமைந்த ஐந்து படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: நயன்தாரா, சமந்தா இடத்தை பிடிக்க வரும் அடுத்த ஹீரோயின்.. உலகளவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை

போக்கிரி ராஜா: 2016ல் ஜீவா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்த படம் தான் போக்கிரி ராஜா. இப்படத்தில் ஜீவா, கொட்டாவி பிரச்சனையால் ஏற்படும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். மேலும் இப்படம் வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்டிருந்தாலும் போதிய வரவேற்பு பெறவில்லை என்றே கூறலாம். இதில் வரும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.

சொல்லாமலே: 1998ல் லிவிங்ஸ்டன், கௌசல்யா நடிப்பில் வெளிவந்த படம் தான் சொல்லாமலே. இப்படம் லிவிங்ஸ்டனுக்குரிய நகைச்சுவையோடு காதலை உணர்த்தும் விதமாக கதை அமைந்திருக்கும். தான் விரும்பும் காதலியை அடைய பொய் சொல்லி பரிதாபத்தை உண்டுப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இறுதியில் தன் காதலின் உண்மையை உணர்த்த நாக்கை அறுத்துக் கொள்வார். இவரின் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் இப்படம் மக்களின் நேர்மறை விமர்சனத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா.. முழுசாக மாற்றியது யார் தெரியுமா?

நான் சிகப்பு மனிதன்: 2014ல் விஷாலின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளிவந்த படம் தான் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் விஷாலுக்கு ஏற்படும் தூக்க பிரச்சனையால் அவர் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை சமாளிக்கும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படத்தில் சிறிதளவு நகைச்சுவை அமைந்திருந்தாலும் போதிய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.

நானும் ரவுடிதான்: 2015ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் காதம்பரி கதாபாத்திரத்தில் வரும் நயன்தாராவுக்கு காது கேட்காது. ஆனாலும் அந்த குறைபாடு தெரியாமல் அவர் சிறப்பாக நடித்திருப்பார். மேலும் படத்தில் விஜய் சேதுபதியின் நகைச்சுவை கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்ற தந்தது.

Also Read: நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் சிங் நடிகை.. வாய் சவடாலால் போன பட வாய்ப்பு

குட் நைட்: அண்மையில் வெளிவந்த இப்படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் வரும் மணிகண்டனுக்கு குறட்டை பிரச்சனை இருக்கும். அதனால் அவருக்கு ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படத்தில் மணிகண்டன் மற்றும் திலக்கின் நகைச்சுவை காட்சிகள் மக்களை கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவை நகைச்சுவை கலந்த ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Trending News