வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அஜித் நடிக்க தவறிய 7 படங்கள்.. விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட்

சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவருடைய அல்டிமேட் நடிப்பால் இவரை ‘அல்டிமேட் அஜித்’ என்றும் ‘தல அஜித்’ என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். இவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் விழாக்கோலம் போல் கொண்டாடுவதுண்டு.

ஆரம்பத்தில் பல தடுமாற்றங்களை பெற்ற அஜித், அடுத்தடுத்துத் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் இடையில் இவர் சூப்பர்ஹிட் ஆன 7 படங்களில் நடிக்காத நிலை ஏற்பட்டது. அப்படி இவர் கைகழுவிய சூப்பர்ஹிட் படம் ஒன்று விக்ரமுக்கு கிடைத்து, அவருக்கு ஜாக்பாட் அடித்தது.

நேருக்கு நேர்: இயக்குனர் வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் விஜய் உடன் இணைந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் இதில் நடிக்க மறுத்த காரணத்தினால் சூர்யா அந்த கேரக்டரில் நடித்தார். சொல்லப்போனால் சூர்யா அறிமுகமான திரைப்படமும் இதுதான்.

ஜெமினி: சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ஜெமினி படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படத்தில் ரவுடியாக இருக்கும் விக்ரம் கிரணுடன் ஏற்படும் காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. அத்துடன் இப்படத்தில் இடம் பெற்ற ஓ போடு பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் முதலில் அஜித்துக்கு தான் கிடைத்தது. அந்த சமயத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விக்ரமுக்கு ஜாக்பாட் அடித்து அதில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

Also Read: நாவலாக வந்து சூப்பர் ஹிட்டடித்த 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டி போட்ட 3 பேர்

நந்தா: பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா. சூர்யாவை ஹீரோ என்று அடையாளம் காட்டும் விதமாக நிலை நிறுத்திய படம் நந்தா. இந்த படத்தில் மிக சவாலான கதாபாத்திரத்தை ஏற்று தனது சிறந்த நடிப்பை சூர்யா வெளிக்காட்டி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் முதலில் அஜித் கைக்கு வந்த பிறகுதான் சூர்யாவுக்கு சென்றது. இந்த படத்தின் வெற்றிதான் சூர்யாவின் சினிமா கெயரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

நியூ: 2004 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கி தயாரித்த இந்தப் படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். ஆங்கிலத் திரைப்படத்தின் மறுபக்கமாக வெளிவந்த இந்தப் படத்தில் கதாநாயகியாக சிம்ரன், தேவயானி, கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் கிடைத்தது. இந்தப் படத்தில் அஜித் தான் முதலில் நடிப்பதாக இருந்தது. அவர் மறுத்ததால் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் நடித்தார்.

Also Read: சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்.. தேசிய விருதை பெற்று தந்த சூரரைப் போற்று

கஜினி: ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற குறைபாட்டினால் பாதிக்கப்படும் இளைஞராக சூர்யா இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித் நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த இந்த திரைப்படம் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்கு பின்னர்தான் சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக பல திரைப்படங்களில் மாஸ் காட்டினார். இந்தப் படத்தில் அஜீத் தான் நடிக்க கமிட் ஆனார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

Also Read: தமிழில் கேங்ஸ்டர் கதைகள் மூலம் மிரட்டிய 6 ஹீரோக்கள்.. இதில் 5 படங்களில் அதிரடி காட்டிய அஜித்

நான் கடவுள்: ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள். இந்தப் படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஏழாவது உலகம்’ என்ற புதினத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஆர்யாவுக்கு பதில் முதலில் அஜித்துடன் நடிக்க இருந்தது. ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக அவர் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டதும், அந்த வாய்ப்பு ஆர்யாவிற்கு கிடைத்தது.

இவ்வாறு அஜித் என்னதான் இப்போது டாப் நடிகராக இருந்தாலும் அவர் நடிக்க தவறிய இந்த ஏழு படங்களில் மட்டும் நடித்திருந்தால் பல வெற்றிகளை குவித்திருப்பார்.

Trending News