திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்

சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறி தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். அதிலும் இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் சூப்பர் ஹிட் ஆகும் 5 படங்களை கைவிட்டுள்ளார். அஜித் கைநழுவ விட்ட வாய்ப்பை சூர்யா சரியாக பயன்படுத்தி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.

நேருக்கு நேர்: ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு விஜய்யும் அஜித்தும் அடுத்ததாக நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் கடைசியில் அந்த படத்தின் இயக்குனர் வசந்த் அஜித்தை நடத்திய விதம் சரியில்லாததால் படத்தில் இருந்து விலகினார்.

இவர் ஏற்கனவே அஜித்தின் ஆசை படத்தையும் இயக்கியவர். ஆசை படத்திலும் வசந்த் அஜித்தை மரியாதை இல்லாமல் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேருக்கு நேர் படத்திலும்  மறுபடியும் தன்னுடைய வேலையை காட்டியதால் கோபத்தில் அஜித் அந்த படத்தையே தூக்கி எறிந்து விட்டாராம். அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். இந்த வாய்ப்பை சூர்யா சரியாக பயன்படுத்தி தன்னுடைய சினிமா கெரியரை உச்சத்துக்கு செல்ல வழி வகுத்தார். 

Also Read: 80’s முதல் இப்ப வரை கவர்ச்சிக்கு பேர் போன 6 ஹீரோயின்கள்.. எக்கு தப்பாய் விஜய்யுடன் கவர்ச்சி காட்டிய சங்கவி

நான் கடவுள்: 2009 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருந்த படம் தான் நான் கடவுள். அஜித்தை வைத்து இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரிலீஸ் ஆகி ட்ரெண்டானது. இந்த படத்தில் நடிப்பதற்காகவே அஜித் பாலாவுக்கு 150 நாள் கால்சீட் கொடுத்திருந்தார். ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அஜித் விலகி விட்டார். அதன் பிறகு தான் இந்த படத்தில் அஜித்துக்கு பதில் ஆர்யா நடித்தார்.

காங்கேயன்: வரலாறு படத்தின் வெற்றிக்குப் பிறகு மறுபடியும் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் காங்கேயன். இந்த படத்தில் அஜித் 4 கேரக்டரில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் மிரட்டலான போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் படம் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே அஜித் இதில் இருந்து விலகி விட்டார். ஒருவேளை இதன் ஷூட்டிங் நடந்திருந்தால் நிச்சயம் படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். அஜித்துக்கும் மிகப்பெரிய படமாக அமைந்திருக்கும் .

Also Read: அஜித், மஞ்சு வாரியர் போட்ட பெரிய பிளான்.. தடாலடியாய் ஊத்தி மூடிய ஏகே-62 படக்குழு

ஏறுமுகம்: அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் இயக்கத்தில் வெளியான காதல் மன்னன், அமர்களம் போன்ற படங்களுக்குப் பிறகு 3-வது முறையாக ஏறுமுகம் என்ற படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்த நிலையில், திடீரென்று அஜித் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று விலகிவிட்டார். பிறகு இதே படத்தின் கதையில் தான் விக்ரம் நடித்து ஜெமினி என்ற படம் ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட் ஆனது.

நியூ: 2000 ஆம்ஆண்டுகளில் அஜித், ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் இணையத்தில் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எஸ்ஜே சூர்யா அஜித்தின் நடிப்பில் ஏகப்பட்ட கரெக்சன் சொல்லி இருக்கிறார்.

‘நீங்களே நன்றாக நடிக்கிறீர்கள். இந்த படத்தில் நீங்களே நடித்துக் கொள்ளுங்கள்’ என்று அஜித் எஸ்ஜே சூர்யாவிடம் சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதன்பின் அதே கதையில் 2004 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யாவும் சிம்ரனும் இணைந்து நடித்து நியூ படம் வெளியானது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

இவ்வாறு அஜித் ஒரு சில காரணங்களினால் இந்த 5 படங்களிலும் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நேருக்கு நேர் படத்தில் அஜித் தவறவிட்ட வாய்ப்பை லட்டு மாதிரி சூர்யா பயன்படுத்திக் கொண்டார்.

Trending News