திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மார்க்கெட்டில் விலை போகாமல் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. எதுக்கும் அசராமல் கேரியரை தொலைத்த அரவிந்த்சாமி

Actor Aravindhsamy: பொதுவாக ஒரு படம் இயக்குவது என்பது மிகவும் குதிரை கொம்பாக தான் இருக்கிறது. அந்த அளவிற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து அதற்கு ஏற்ற மாதிரி கதை அமைந்து படங்களை எடுத்தால், அதிலும் சிக்கல்கள் நிறைந்திருக்கிறது. அதாவது முழுசாக ரசிகர்களிடம் ஒரு படம் போய் சேர வேண்டும் என்றால் அதற்கு முழு பொறுப்பும் தயாரிப்பாளர்கள் மீது தான் இருக்கிறது.

அந்த வகையில் சில படங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் மார்க்கெட்டில் விலை போகாமல் அப்படியே கிடப்பில் கிடந்து கொண்டு வருகிறது.  பல வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். அதில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் கிட்டத்தட்ட எட்டு வருட காலங்களாக அப்படியே கிடக்கிறது.

Also read: லியோ படத்தின் ஹைப்பை அதிகரிக்க செய்த வேலை.. நாலா பக்கமும் அடிபட்டு வரும் விக்ரம்

அடுத்தபடியாக நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் சதுரங்க வேட்டை  படத்தில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் மேலாகியும் இன்னும் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துக் கொண்டு வருகிறது. ஆனாலும் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று அசால்ட்டாக அரவிந்த்சாமி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் உருவான சர்வர் சுந்தரம் படமும் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் படம் ஆரம்பித்த கொஞ்ச நாளிலே இதில் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த வகையில் படம் வெளி வந்தாலும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும். இருந்த போதிலும் பண பிரச்சனையால் இழுவையில் இருக்கிறது.

Also read: அரவிந்த்சாமியின் உண்மையான அப்பா இவர் இல்ல.. அதிர்ச்சிய கிளப்பிய நடிகர்

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் நரகாசுரன் படம் பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.  பல வருட காலமாக பைனான்ஸ் பிரச்சனையால் திக்கித் தவித்து படத்தை வெளியிட முடியாமல் வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்ட இடம் பொருள் ஏவல் திரைப்படம் கிட்டத்தட்ட 10 வருடங்களாகவே ரிலீஸ் ஆகாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வருவதால் இந்த படம் வரவில்லை என்றால் எனக்கென என்று சுற்றி கொண்டு வருகிறார்.

Also read: ரெண்டு பிள்ளைக்கு அம்மாவா நடிக்க முடியாது என தெறித்து ஓடிய நடிகை.. அரவிந்த்சாமிக்கு இந்த நிலைமையா?

Trending News