வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பரத் கேரியரை தூக்கி நிறுத்திய 5 படங்கள்.. 50 படங்களில் நடித்தும் கிடைக்காத பேர், புகழ்!

Actor Bharath Best Movies: பரத் தமிழ் சினிமாவுக்கு பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக செல்லமே, காதல் போன்ற படங்களில் நடித்து ஹீரோ என்ற இமேஜை பிடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்படி இவருடைய கேரியர் ஒழுங்கா போய்க்கொண்டிருந்த நிலையில், எந்த படத்தின் மூலம் இவருக்கு சறுக்கு ஏற்பட்டது என்று இவருக்கே தெரியவில்லை. அப்படி இவர் நடித்த படங்களில் இவருக்கு பெஸ்டாக அமைந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

செல்லமே: காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷால், ரீமா சென், பரத், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பரத், விஷ்வா என்ற கேரக்டரில் முரண்பாடான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரை தம்பி போல் நினைத்து வரும் ரீமாசென்-னை கல்யாணம் பண்ண நினைக்கும் விஷ்வாவின் அடாவடி செயல்களை முன்னுறுத்தி காட்டிய படமாக இருக்கும்.

Also read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

காதல்: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு காதல் திரைப்படம் வெளிவந்தது இதில் பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பரத் மெக்கானிக் செட்டில் வேலை பார்ப்பார். இவரை பார்த்து பள்ளியில் படிக்கும் சந்தியா காதலிக்க ஆரம்பிக்கிறார். பிறகு இவர்களுடைய திருமணம் நடந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்களை பிரித்து விடுகிறார்கள். அதன் பின் பரத் பைத்தியமாக அலைவார். இப்படம் பரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

எம்டன் மகன்: இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் எம்டன் மகன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் பரத் அவருடைய சிறப்பான நடிப்பை கொடுத்து படத்தை வெற்றியடைய செய்திருப்பார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக லாபம் பார்த்தது.

Also read: 50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

வெயில்: வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் பரத், பசுபதி, பாவனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது இரண்டு மகன்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதாவது குடும்ப சம்பந்தப்பட்ட படம் என்றால் பரத்துக்கு கைவந்த கலை போல் இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வணிக ரீதியான அதிக லாபத்தை கொடுத்தது.

சேவல்: இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படம் வெளிவந்தது. இதில் பரத், பூனம் பஜ்வா, சிம்ரன், வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காதல், அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்தது. இதில் பரத், முருகேசன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். சில சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர் ஜெயிலுக்கு போயிட்டு வருவதிலிருந்து இப்படம் ஆரம்பித்திருக்கும். இதில் இவருடைய நடிப்பு சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு கைதட்டளை வாங்கி இருப்பார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

இப்படி வெற்றி படங்களை கொடுத்து கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை பேரும், புகழும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Also read: சின்ன பிள்ளைத்தனமா பட்டத்துக்கு அலையற ஆளு இல்ல.. மறைமுகமாக தாக்கி பேசிய பரத்

Trending News