வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வேற்று மொழி நடிகர்களை இங்கே வளர்த்துவிட்ட 5 படங்கள்.. சிவகார்த்திகேயன் காலை வாரி விட்ட ஆதி

5 films that brought up other language actors here: சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் நடிகர்களுக்கு மட்டுமில்லாமல் படத்தின் கதை, நடிப்பு நன்றாக இருந்தால் அவர்களுக்கு எப்பொழுதுமே எங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் வேற்று மொழி நடிகர்கள் நடித்த படங்கள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களையும், நடிகர்களையும் பற்றி தற்போது பார்க்கலாம்.

புஷ்பா: அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இவர் புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். எங்கு திரும்பினாலும் இவருடைய டயலாக் ஆன “புஷ்பா, புஷ்பா ராஜ் எதுக்கும் அடங்காதவன்” என்ற ஒரு டயலாக் பட்டி தொட்டி எல்லாம் பறந்து அனைவரும் ரீகிரேட் பண்ணும் அளவிற்கு ஃபேமஸ் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து புஷ்பா பார்ட் 2 படத்தை வைத்து மறுபடியும் தமிழ் ஆடியன்ஸை கவர்ந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்.

பிரபாஸ்: தெலுங்கு நடிகராக ஜொலித்து வந்த பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக மாறிவிட்டார். இவர்தான் உண்மையான ஹீரோ என்று தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆனால் இதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் பாகுபலி படத்திற்குப் பிறகு வந்த எந்த படங்களும் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. இருந்தாலும் அந்த ஒரு படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

Also read: KGF இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்.. பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் சலார் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

பகத் பாசில்: இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நஸ்ரியாவின் கணவராக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் எப்பொழுது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் கூடவே இருந்து அவர் காலை வாரிவிட்டு ஒரு தூக்கலான நடிப்பை கொடுத்தாரோ அப்பொழுது அனைவருக்கும் பரிச்சயம் ஆகிவிட்டார். அதன் பின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து விட்டார்.

பிரித்விராஜ்: மலையாள படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் பிரிதிவிராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் தமிழில் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமிருந்து இவருக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அத்துடன் இவருடைய படங்களுக்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் வரவேற்பு உண்டு என்பதற்கு ஏற்ப மக்களின் பேவரைட் ஹீரோவாக மாறிவிட்டார்.

நானி: தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நானி. அதன் பிறகு நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் இவர் பக்கம் திருப்பி விட்டார். முக்கியமாக இவருடைய ஹாண்ட்சம் லுக் மற்றும் சிரிப்புக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கமாக குவிந்து விட்டார்கள். தற்போது இவர் நடித்த படங்கள் தமிழில் பெருசாக வரவில்லை என்றாலும் இவருக்காகவே மற்ற மொழிகளில் உள்ள படத்தையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்த ஹீரோவாக மாறிவிட்டார்.

Also read: அந்த தமிழ் நடிகர் தான் வேணும்னு அடம் பிடித்த பிரபாஸ்.. 3 மடங்கு சம்பளம்னு காட்டிய பச்சைக்கொடி

Trending News