திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அண்ணன் தங்கை சென்டிமென்டை கொண்டாடிய 5 படங்கள்.. நடிப்பில் பாசத்தை தூக்கி சுமந்த ராஜ்கிரண்

பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கும் படங்கள் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை உருக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய படங்கள் நல்ல வெற்றியை பெற்று உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இப்படங்களை காண வருபவர்களையே கண்ணீர் சிந்த வைக்கும் விதமாக அமைந்த படங்கள் ஏராளம்.

அண்ணன், தங்கை பாச போராட்டம் மற்றும் தங்கைக்கு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும் அண்ணன். அதை தொடர்ந்து விட்டுக் கொடுக்கும் கேரக்டர்கள் என்று பலவிதத்தில் படங்கள் வெளிவந்துள்ளன. இதுபோன்று நம் மனதில் இடத்தை பிடித்த 5 படங்களை பற்றி இந்த காணலாம்.

Also Read: திருப்பாச்சி முதல் லியோ வரை விஜய் வாங்கிய சம்பளம்.. ஒன் மேன் ஆர்மியாக வலம் வரும் தளபதி

சமுத்திரம்: 2001ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மூன்று அண்ணன்கள் தன் தங்கை மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படத்தில் சரத்குமார், முரளி, மனோஜ், அபிராமி, காவேரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். தன் தங்கை
திருமணத்திற்கு பிறகு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அண்ணன்கள் தன் பாசத்தை வெளிக்காட்ட தன்னிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் வாரி கொடுப்பார்கள். இருப்பினும் நிம்மதி இல்லாத வாழ்க்கையை அண்ணன்களுக்காக தூக்கிப் போடும் தங்கை கதாபாத்திரம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

பாண்டவர் பூமி: 2001ல் சேரன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், சமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தன் தங்கையை தோளின் மீது தூக்கிக் கொள்ளும் அண்ணன் கதாபாத்திரத்தில் இடம்பெறும் ராஜ்கிரணின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். மேலும் இதில் இடம்பெறும் அண்ணன் தங்கையின் பாசத்தை மிஞ்சும் அளவிற்க்கு காதலை வெளிப்படுத்தி இருப்பார் அருண் விஜய். இப்படம் அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு அடையாளமாக அமைந்தது.

Also Read: விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 மொக்கை வாங்கியது.. இதுல பார்ட் 3 வேறயா

கிழக்கு சீமையிலே: 1993ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கிழக்கு சீமையிலே. இப்படத்தில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தன் தங்கையான ராதிகாவிற்கு திருமணம் ஆன பிறகு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும் அண்ணனாக விஜயகுமார் நடித்திருப்பார். இப்படத்தில் தன் கணவனான நெப்போலியனை விட தன் அண்ணனின் பாசம் உயர்ந்தது என்பதை உணர்த்தும் விதமாக நடிப்பில் அசத்தி இருப்பார் ராதிகா.

சொக்கத்தங்கம்: 2003ல் வெளிவந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள். தன் தங்கையின் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் துயரத்தை எதிர்கொள்ளும் அண்ணனாக நடித்திருப்பார் விஜயகாந்த். இதில் இடம்பெறும் அண்ணன் தங்கையின் சென்டிமென்ட்டுகள் பெரிதும் பேச வைத்தது. இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தேரை இழுத்து தெருவில் விட்ட அட்லீ.. விஜய்யிடம் மன்றாடி காரியத்தை சாதித்த தயாரிப்பு நிறுவனம்

திருப்பாச்சி: 2005ல் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய், த்ரிஷா, மல்லிகா, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் குறிப்பாக தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க விரும்பும் விஜய் மேற்கொள்ளும் செயல்கள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் தன் தங்கைக்காக குடியேறும் இடத்தை ரவுடிகள் இல்லாமல் சுத்தம் செய்யும் பொறுப்புள்ள அண்ணனாக விஜய் நடித்திருப்பார். இப்படம் மக்களின் வரவேற்பை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News