5 films that collected collections in re-release: சில படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். அதுவும் அதே படங்களை இப்போ உள்ள ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி திரையரங்குகளில் பார்த்தால் இன்னும் சந்தோஷமாகவே இருக்கும்.
அந்த வகையில் கொஞ்சம் காலமாகவே, ஹிட்டான படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். அதிலும் கமலா தியேட்டர் தான் இந்த மாதிரி ஒரு ட்ரெண்டிங்கை கொண்டு வந்தாங்க. கொண்டு வந்தது மட்டுமல்லாமல் வெறும் 49 ரூபாய்க்கு மட்டும் தான் டிக்கெட்டை விற்பனை செய்து படத்தை மறுபடியும் பார்க்க வைத்தார்கள்.
அப்படிப்பட்ட சில படங்களை பற்றியும், அந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதால் கிடைத்த வசூலையும் பற்றி பார்க்கலாம்.
3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 3 திரைப்படம் வெளிவந்தது. தனுஷ் மற்றும் சுருதிஹாசனின் காதல் பெற்றோர்களின் சம்பந்தப்படி திருமணம் நடந்தாலும் இவர்களால் சந்தோஷமாக வாழ முடியாமல் போய்விட்டது.
திடீரென்று இப்படத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விதமாக சுருதிஹாசனின் வைத்து கதை நகரும். பின்பு மறுபடியும் இப்படம் கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்து 5 லட்ச ரூபாய் வசூலை பெற்றது.
வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தது. காதல் மற்றும் குடும்ப கதையை அழகான உணர்வுடன் கொடுத்து குடும்பத்துடன் பார்க்க வைத்தது. அப்படிப்பட்ட இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 4ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 4.5 இலட்சத்தை லாபமாக பெற்றது.
ரொமான்டிக்கை தெறிக்க விட்ட சாக்லேட் பாய்
மின்னலே: கௌதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென் நடிப்பில் மின்னலே திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ரொமாண்டிக் படமாக அமைந்து இளசுகளின் மனதை கொள்ளை அடித்தது. அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் ரீலீஸ் செய்யப்பட்டு 4லட்சம் ரூபாய் வசூல் கிடைத்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் 2019 விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா ஒருவரை ஒருவர் காதலித்தாலும் குடும்ப சூழ்நிலையால் இவர்களுடைய காதல் நிறைவேறாமல் பாதிலேயே முடிந்து போய் இருக்கும்.
ஆனாலும் இப்படம் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் இப்படம் கடந்த மாதம் 15 ஆம் தேதி கேரளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 3.8 லட்சத்தை பெற்றிருக்கிறது.
சிவா மனசுல சக்தி: எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா பகவத் நடிப்பில் 2009ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளிவந்தது. எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ரகடான காதல் எப்படி ஒன்று சேருகிறது என்று அதை நோக்கி கதை நகரும். அப்படிப்பட்ட இப்படம் மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் 3 லட்சத்தை லாபமாக பெற்றது.