வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மனதைத் தொட்டும் வரவேற்பே இல்லாத 5 படங்கள்.. சமுத்திரக்கனி செதுக்கியும் பயனில்லை

தமிழ் சினிமாவிற்கு நல்ல கதை களத்தை கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதைத் தொடும் சில படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்காமல் போகிறது. இதனால் பெரும்பாலும் கமர்சியல் படங்களை தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என ஒரு சில படங்கள் மட்டுமே கதைக்காக உருவாகிக்கொண்டிருக்கிறது.

அப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் மனதைக் கவர்ந்த 5 படங்களில், சமுத்திரக்கனி நல்ல கருத்துக்களை சொல்ல தன்னை செதுக்கினாலும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குக்கூ: 2014 ஆம் ஆண்டு ராஜுமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், மாளவிகா நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம், பார்வையற்ற காதலர்களின் காவியமாக எடுக்கப்பட்டிருக்கும்.

நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை மிகவும் எதார்த்தமாகவும் முழுக்க முழுக்க பார்வையற்றவர்களை சுற்றியே கதை நகர்வது போல் உருவாக்கியிருப்பார்கள். இருப்பினும் இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பேரன்பு: சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை சொல்லும் இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நல்ல கதைக்களத்தை கொண்டதால் ஹாங்காங் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விருதுகளுக்கு என்ன படம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்துக்கு வசூல் ரீதியாக போதிய வரவேற்பு கிடைக்காததுதான் படக்குழுவை வருத்தமடைய செய்தது.

அப்பா: 2016 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி எழுதி இயக்கிய புரட்சிகர படமாக வெளிவந்த இந்தப் படத்தில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கதையாக அமைத்திருப்பார்கள். தம்பி ராமையா, சமுத்திரக்கனி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருப்பார். பல பெற்றோர்களின் மனதை தொட்ட இந்தப் படத்திற்கும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

விநோதய சித்தம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கி தம்பிராமையா நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் தன்னையே அவர் செதுக்கி வைப்பார் இந்த படத்தில் பிறரது வாழ்க்கையில் நாம் இல்லை என்றாலும் தானாக நடக்கும் விஷயமெல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கும் என்று செவிட்டில் அடித்தாற்போல் இந்தப்படத்தில் சொல்லியிருப்பார் இந்த படத்திற்கும் வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்காமல் போனது.

ஆதார்: கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாஸ் நடிப்பில், ராம்நாத் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் அருண்பாண்டியன், இனியா, ரித்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஒரு சாமான்யனின் வாழ்க்கையில், அதிகாரம் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் மையக் கரு. இருப்பினும் இந்த படம் கணிசமான தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸாகி, வசூல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குழலி : சில தினங்களுக்கு முன்புதான் ரிலீஸ் ஆன புத்தம் புது படம் குழலி. இயக்குனர் இந்தப் படத்தை சேர கலையரசன் இயக்கி, விக்கி, ஆரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இயக்குனர் இந்த படத்தின் மூலம் மண்மணம் மாறா கிராம வாழ்க்கையை இந்தக் காலத்து இளைஞர்களுக்கு காண்பித்து, தாங்கள் வாழ்ந்து மனதில் பதிந்த ஆழமான நினைவுகளை அப்படியே படமாக்கி காண்பித்திருக்கிறார். ரிலீஸாகி சில நாட்களே ஆனாலும் நாளுக்கு நாள் வசூல் மந்த நிலையில் உள்ளது.

இவ்வாறு இந்த 5 படங்களுமே பார்க்கும் ரசிகர்களின் மனதை தொட்டிருக்கிறது. இருப்பினும் இப்படிப்பட்ட படங்களை ஊக்குவிக்காமல் இருப்பது கோலிவுட்டில் இருக்கும் பெரும் அவலமாக பார்க்கப்படுகிறது.

Trending News