வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

பெரிய நடிகர்களின் மார்க்கெட்டை காலி பண்ணிய 5 படங்கள்.. விஜயகாந்துக்கு கைகொடுக்காமல் போன அந்த படம்

முன்னணி நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். அவர்கள் எப்படி பல படங்களில் வெற்றியை பார்த்து இருப்பார்களோ அதே அளவுக்கு தோல்வியும் சந்தித்து தான் வந்திருப்பார்கள். அப்படி பெரிய நடிகர்களின் மார்க்கெட்டை காலி பண்ணிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

சிவசக்தி: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு சிவசக்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், பிரபு, சுஜாதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரபு சீக்ரெட் போலீஸ் ஆபீஸராக இருந்து சத்யராஜ் செய்யும் தில்லு முல்லு வேலைகளை கண்டுபிடிக்கும் ஒருவராக வந்த பிறகு அவருடைய தங்கையை காதலிப்பதால் சத்யராஜுக்கு உண்மையாக இருக்கிறாரா அல்லது அவரை தண்டிக்கிறாரா என்பதுதான் முக்கிய கதை. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பிரபுவுக்கு இந்த படம் தூக்கிவிடவில்லை.

Also read: வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

கழுகு: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு கழுகு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ரதி, தேங்காய் சீனிவாசன், விகே ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வழக்கத்திற்கு மாறான கதையை வைத்து நகர்ந்ததால் பாக்ஸ் ஆபிஸில் படம் சிறப்பாக செயல்படவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று இறுதியில் தோல்வி அடைந்து 50 நாட்களுக்கும் குறைவாகத்தான் ஓடியது. இப்படம் ரஜினி காலை வாரிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படுமோசமான தோல்வியை கொடுத்தது.

நீல மலர்கள்: கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு நீலமலர்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, மேஜர் சுந்தரராஜன், கே.ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பார்வையற்ற ஸ்ரீதேவிக்கு இவருடைய நண்பராக இருக்கும் ஒருவர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவருடைய கண்களை அவருக்கு தானம் செய்வதாக இக்கதை நகரும். இதில் டாக்டராக கமலஹாசன் நடித்திருப்பார். ஆனால் இந்த படம் கமலுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

Also read: சூர்யாவை ஓரம் கட்ட வரும் அருண் விஜய்.. கடைசி 5 படத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டா தலை சுத்துது

நந்தவனத் தேரு: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு நந்தவனத் தேரு திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், ஸ்ரீநிதி, ஆனந்தராஜ், ஜனகராஜ், வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் எதிர்மறையான கேரக்டரில் நடித்திருப்பார் ஆனாலும் கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவக் கூடியவராக இருப்பார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோசமான நிலையை சந்தித்தது.

தூரத்து இடி முழக்கம்: கே விஜயன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு தூரத்தில் இடி முழக்கம் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ஏகே வீராசாமி மற்றும் பூர்ணிமா தேவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மீனவ சமூகத்தில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்லும் விதமாகவும், காதலுக்கும் கணவனுக்கும் இடையே துவண்டு போன பெண்ணின் கதையை கூறப்பட்டிருக்கும். இப்படம் விஜயகாந்த் க்கு சினிமாவில் மூன்றாவது படம். ஆனால் இந்த படம் இவருக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

Also read: 1000 கோடி முதலீடு, லைக்காவால் விழி பிதுங்கி நிற்கும் ரஜினி, அஜித்.. மரண அடி வாங்க போகும் டாப் ஹீரோக்களின் 4 படங்கள்

- Advertisement -spot_img

Trending News