திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் கதைகள் அமைந்தும் கொண்டாடாத ஆர்யாவின் 5 படங்கள்.. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம்

ஆர்யா தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக பயணித்து வருகிறார். ஒரு ஹீரோவாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் கொண்டாடத் தவறிய ஆர்யாவின் 5 படங்களை பார்க்கலாம்.

வட்டாரம் : சரண் இயக்கி, தயாரித்த படம் வட்டாரம். இப்படத்தில் ஆர்யா, நெப்போலியன், நதியா என பலர் நடித்திருந்தனர். மேலும் ஆர்யா பர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான கதை அமைந்தும் இந்த படம் ஆர்யாவுக்கு கைகொடுக்காமல் தோல்வியை சந்தித்தது.

Also Read :போஸ்டர் காசுகூட வசூலிக்காத படம் .. மனசாட்சியே இல்லாமல் தயாரிப்பாளர்களை கதறவிடும் ஆர்யா

சர்வம் : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு ஆர்யா, த்ரிஷா மற்றும் பல நடிப்பில் வெளியான படம் சர்வம். ஒரு தனிநபர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படமும் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.

மீகாமன் : மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மீகாமன். இப்படத்திற்கு தமிழ் இசை அமைத்திருந்தார். மீகாமன் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை தழுவியது.

Also Read :அநியாயம் பண்ணும் ஆர்யா.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்

மகாமுனி : கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்யா, இந்துஜா ரவிச்சந்திரன், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாமுனி. இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஆனால் தமிழ் சினிமா இப்படத்தை கொண்டாட தவறியது.

எனிமி : ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யா, விஷால், மிர்னாலின் ரவி, மம்தா மோகந்தாஸ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் எனும். இப்படத்தின் கதை சுவாரஸ்யமாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும். ஆனால் ரசிகர்களின் கவனத்தை இப்படம் ஈர்க்கவில்லை.

Also Read :கமலுக்கு கல்தா கொடுத்துவிட்டு ஜோராக நடக்கும் வேலை..ஆர்யா அதிகமாக எதிர் பார்த்ததால் வந்த வினை

Trending News