வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

KS ரவிக்குமார் இரண்டாம் பாகம் எடுக்க அடம்பிடிக்கும் 5 படங்கள்.. பெரிய பெரிய தலைகளுக்கு கொடுத்த மெகா ஹிட்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷ படமாக பல படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவர் பெரிய பெரிய தலைகளை வைத்து பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து, பல வசூல் சாதனைகளை முறியடித்து அனைத்து இயக்குனர்களின் மூக்கிலும் விரலை வைக்க வைத்தவர்.  அதிலும் 5 படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் விரும்பினார்

நாட்டாமை: 1994 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு சரத்குமார் மற்றும் விஜயகுமார் இருவரும் நாட்டாமையாக தங்களது கம்பீரமான நடிப்பை இந்தப் படத்தில் வெளிக்காட்டி இருப்பார்கள். குறிப்பாக சரத்குமாரை விட விஜயகுமாருக்கு நாட்டாமை கெட்டப் கச்சிதமாக பொருந்தி, படத்தில் இவர் தனது கம்பீரமான குரலில் தீர்ப்பளிக்கும் நாட்டாமையாக நடித்து இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றினார்.

அதன்பிறகு நாட்டாமை என்றாலே நம் கண்முன் விஜயகுமார் முகம் தான் வரும் என்ற அளவிற்கு அவருக்கு இந்தப் படத்தின் மூலம் கேஎஸ் ரவிக்குமார் ஒரு அடையாளத்தையே கொடுத்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் எடுக்க விரும்பினார்.

Also Read: ஹீரோக்களை ஓரங்கட்டி.. ஞாயம்டா, நீதிடா என நாட்டாமை விஜயகுமார்காக ஓடிய 6 படங்கள்!

படையப்பா: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது.

இதில் ரஜினி, ரம்யாகிருஷ்ணன் இருவரின் பேமஸ் டயலாக் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்து பிறகு கேஎஸ் ரவிக்குமார் இரண்டாம் பாகத்தை எடுக்க மிகவும் ஆசைப்பட்டாராம்

அவ்வை சண்முகி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் நாகேஷ், ஜெமினி கணேசன், மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் கமலஹாசன் மகளுக்காக பெண் வேடமிட்டு வேலைக்காரியாக பணிபுரியும்போது அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் இருக்கும்.

இதனால் பல வேடங்களில் திரையுலகை கலக்கிய கமலஹாசனுக்கு அவ்வை சண்முகி மூலம் ரசிகர்கள் அவரை மேலும் கொண்டாடினர். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்திருந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும்.

Also Read: ரஜினி, ரம்யா கிருஷ்ணனுக்காக 11 டேக் எடுத்த KS ரவிக்குமார்.. 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

பிஸ்தா: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு கார்த்திக், நக்மா, மணிவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழகம் முழுவதும் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய சூப்பர் ஹிட் படமாகும். காமெடி கலகலப்பிற்கும், நக்கல் நையாண்டிக்கும் பஞ்சமில்லாத இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கேஎஸ் ரவிக்குமார் நினைத்தாராம்.

தர்ம சக்கரம்: 1997 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜயகாந்த், ரம்பா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் அதிரடி மற்றும் காதல் திரைப்படமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க விரும்பியிருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.

இவ்வாறு கேஎஸ் ரவிக்குமார் மனதில் நினைத்த இந்த 5 படங்களின் இரண்டாம் பாகம் இனிமேலும் வெளிவந்தால் அதை கொண்டாடுவதற்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்

Trending News