வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உதயநிதி அரசியலுக்கு அஸ்திவாரம் போட்ட 5 படங்கள்.. முதலும் கடைசியுமா வசூலை அள்ளிய மாமன்னன்

Udhayanidhi Stalin Movies: தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர் வேலன் காதல் போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து முதலில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு எப்படி இருந்தாலும் அரசியலுக்கு தான் போகப் போகிறோம் என உதயநிதி அரசியலுக்கு அஸ்திவாரம் போட்ட 5 படங்களை பற்றி பார்ப்போம்

மனிதன்: உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா மோத்வானி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் மனிதன். இந்த படத்தை 1999 டெல்லி ஹிட் அண்ட் ரன் வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளனர். ஒரு ஜூனியர் வழக்கறிஞராக உதயநிதி, விரைவில் பணம் மற்றும் புகழை சம்பாதிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அப்பாவி மக்களின் பிரச்சினைக்காக சக்தி வாய்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு எதிராக வழக்கு தொடுகிறார். அதன் பின் ஒரு மனிதனாக சாமானியர்களுக்கு நீதி வாங்கி கொடுப்பதுதான் இந்த படத்தில் கதை. இதில் உதயநிதி முதல் முதலாக அரசியல் பேசி தன்னை ஒரு தலைவனாக காட்டிக்கொள்ள நினைத்தார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை.

Also Read: மாமன்னனில் உதயநிதி கதாபாத்திரத்தை நடிக்க மறுத்த நடிகர்.. அவர் நடித்திருந்தால் டபுள் மடங்கு லாபம் தான்

கண்ணே கலைமானே: உதயநிதி ஸ்டாலின், தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தில் இயற்கை விவசாயத்தை அதிகமாக பேசினார். இந்த படத்தில் கமலக்கண்ணனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் வங்கி மேலாளர் பாரதி கதாபாத்திரத்தில் நடித்த தமன்னாவை திருமணம் செய்தார். இந்த படத்தில் வரதட்சணை கொடுக்க முடியாது என பெண் தைரியமாக பேசுவதை காட்டினர். அது மட்டுமல்ல திருமணத்திற்கு பிறகு பாரதி வேலைக்கு செல்வதை கமலக்கண்ணனின் பாட்டி விரும்பாததால் தனிக்குடித்தனம் சென்றனர்.

அங்கு தான் பாரதிக்கு கண் பார்வை செயலிழந்து போகும். தன்னுடைய மனைவிக்கு இருக்கும் பிரச்சினையை வெளியில் தெரியாமல் கமலக்கண்ணன் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. பல புரட்சிகரமான விஷயத்தை உதயநிதி இந்த படத்தில் பேசி தன்னுடைய அரசியல் பயணத்திற்கு அச்சாரம் போட்டார். ஆனால் இந்த கேரக்டர் அவருக்கு சுத்தமாகவே செட்டாகவில்லை.

Also Read: விஷ செடியாக வளர்ந்து வரும் மாரி செல்வராஜ் திட்டங்கள்.. படம் மூலமாக திணிக்க நினைக்கும் நரி மூளை

கலகத் தலைவன்: மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் தான் கலகத் தலைவன். இந்த படத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் கார்ப்பரேட் செய்யும் செயல் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதையும் கார்ப்பரேட் அரசியலையும் உதயநிதி வெளிப்படையாக பேசி அரசியலுக்கு வருவதற்காக காய் நகர்த்தினார்.

நெஞ்சுக்கு நீதி: இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தார். ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளிகளை ஆதாரத்துடன் சிக்க வைத்தது மட்டுமல்ல, ஜாதி அடிப்படையில் ஆன பாகுபாடு மற்றும் தீண்டாமையையும் இந்தப் படத்தில் உதயநிதி வலுவாக பேசினார்.

Also Read: மாமன்னன் வசூலுக்காக உதயநிதி செய்த தந்திரம்.. சிவகார்த்திகேயனால் தவிடுபடியாகுமா?

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்துள்ளனர். இந்த படத்தில் பழங்காலமாகவே மனிதர்களிடம் ஊறிக் கிடக்கும் சாதி வெறியை தோலுரித்துக் காட்டினர். அது மட்டுமல்ல இந்த படத்திற்கு பிறகு உதயநிதி முழு நேர அரசியலில் ஈடுபடுவதால் தன்னுடைய கடைசி படத்தில் தன்னை ஒரு நல்ல அரசியல்வாதியாக காட்டுவதற்காகவே சரியாக பயன்படுத்தி கொண்டார்.

அது மட்டுமல்ல இந்த படத்தின் வசூல் தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதன் வசூலை 100 கோடிக்கு கொண்டு வந்து நிப்பாட்ட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார். அவர் பல படங்களை விநியோகம் செய்திருப்பதால் எப்படி வசூல் காட்ட வேண்டும் என அவருக்கு நன்றாகவே தெரியும். திரையரங்குகளில் இன்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு நிகராக மாமன்னன் படத்திற்கும் காட்சிகள் ஒதுக்கப்பட்டு திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரத்தில் மட்டும் 50 கோடியை தாண்டிய மாமன்னனின் வசூல், இன்னும் சில வாரத்தில் 100 கோடியை எட்டி விடும்.

Trending News