புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதிக நேரம் ஓடியதால் டெபாசிட் இழந்த 5 படங்கள்.. 4 மணி நேரம் கொலையாய் கொன்ற படம்

ஒரு காலகட்டத்தில் மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது சினிமா. அதைத் தொடர்ந்து படங்களை திரையில் காண்பதற்கு திரையரங்கம் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு ஓ டி டி யில் படங்களை பார்த்து வருகின்றனர்.

இருப்பினும் தனக்கு பிடித்த ஹீரோவின் படங்கள் என்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு படங்களை காண வரும் ரசிகர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் காத்திருக்க முடிவதில்லை. இருப்பினும் கதை நல்லா இருந்தாலும் அதற்கென்று ஒரு நேரம், காலம் இருக்கிறது. அவ்வாறு தியேட்டரில் வெகு நேரம் ஓடி டெபாசிட் இழந்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: யாஷ் போல் தலையில் குடுமியுடன் மிரட்டும் சேரன்.. அடுத்த படத்திற்கான நியூ லுக்

பாபா: 2005ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த வெளிவந்த படம் பாபா. இப்படம் ரஜினியின் ஆன்மீகத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது. மேலும் படம் கலவையான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஃபெயிலியர் அடைந்தது. அதன் காரணமாக பார்க்கையில் இப்படம் 178 நிமிடம் திரையில் ஓட்டப்பட்டது. அதன் பின் படக் குழுவினரால் 148 நிமிடமாக குறைக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.

தவமாய் தவமிருந்து: 2005ல் சேரன் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த இப்படம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இயக்கப்பட்டது. இப்படமே தமிழ் சினிமாவில் இரண்டாவது நீளமான படமாகும். அதாவது 245 நிமிடங்கள் சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் திரையில் ஓட்டப்பட்டது. அதன்பின் விமர்சனங்களால் இதன் நீளத்தை குறைக்க முற்பட்டு 240 நிமிடங்களாக வெளியிடப்பட்டது. இப்படம் பெரிதளவு பேசப்படாததற்கு இதுவே ஒரு காரணமாகும்.

Also Read: சூப்பர் ஸ்டாரின் மனைவிக்கு இப்படி ஒரு திறமை இருக்கா.! கௌரிகானிடம் தஞ்சம் அடைந்த அட்லீ

புதுப்பேட்டை: 2006ல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் புதுக்கோட்டை. இது ஒரு கேங்ஸ்டர் படமாக அமையப்பட்டிருக்கும். இப்படத்தின் ரன்னிங் டைம் ஆக பார்க்கையில் 179 நிமிடங்கள் ஆகும். மேலும் நீளமான படமாக இருந்தாலும் கதையால் இப்படம் ஹிட் பெற்றது. ஆனாலும் சராசரியான வசூலையே பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க அடிதடி வெட்டு குத்தாக சென்றாலும் ஒரு கேங்ஸ்டர் படத்தை இவ்வளவு நேரம் ஓட்டியது இப்படத்தை தோல்வி பெற செய்தது.

ஆயிரத்தில் ஒருவன்: 2010 செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் கார்த்திக், பார்த்திபன், ரீமா சென்,ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் சுமார் 500 க்கு மேற்பட்ட திரையில் இப்படம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் நீளமாக பார்க்கையில் 181 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரம் 1 நிமிடம். அதன் பின் இப்படத்தை 2மணி நேரம் 34 நிமிடம் என குறைக்கப்பட்டது. இப்படம் வரலாற்று படம் என்பதால் புரியாதவர்களுக்கு வெகு நேரம் காத்திருந்தது போல வெறுப்பை பெற்று தந்தது.

Also Read: படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரனின் புகைப்படம் .. 8 தையல் போட்டதால் கண்கலங்கும் குடும்பம்!

லிங்கா: 2014ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் தான் லிங்கா. இப்படத்தின் ரன்னிங் டைம் ஆக பார்க்கையில் 178 நிமிடங்கள். இப்படத்தின் கதை மக்களின் வரவேற்பு பெறாததால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படத்திற்கு 100 கோடி செலவிடப்பட்டதாகவும், பட தயாரிப்பாளர்கள் தரப்பில் பேரிழப்பை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணத்தாலும் மேலும் நீண்ட நேரம் திரையில் கதை ஓட்டப்பட்டதாலும் இப்படமும் ஃபெயிலியர் படமாக அமைந்தது.

Trending News