வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இயக்குனர் பாண்டிராஜ் முத்திரை பதித்த 5 படங்கள்.. அதிக வசூல் கண்ட சூர்யா படம்

பாசம், சென்டிமென்ட் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். மேலும் இது போன்ற சப்ஜெக்ட் படங்கள் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்று வெற்றி அடைந்து விடுகிறது.

அவ்வாறு படம் பார்க்க வருபவர்களை கண்கலங்க வைக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. மேலும் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொள்ள இவரின் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: 2வது பெரிய கட்சி நாங்க தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் தரப்பு

பசங்க 2: குழந்தைகளை மையப்படுத்தி உருவான படம் தான் பசங்க 2. 2015ல் வெளிவந்த இப்படத்தில் அமலா பால், சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ,அந்த வருடத்தின் சிறந்த பிளாக் பஸ்டர் படமாக இடம்பெற்றது.

வம்சம்: 2010ல் வெளிவந்த இப்படத்தில் அருள்நிதி, சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அருள்நிதிக்கு இப்படம் முதல் படமாக இருப்பின் அவை நல்ல விமர்சனங்களை பெற்று ஓரளவு வசூலை பெற்று தந்தது. இப்படத்தின் மூலமே இவருக்கு அடுத்தக்கட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: முத்தையா யூனிவர்சில் இணைய மறுக்கும் இளம் ஹீரோக்கள்.. பாட்சாவை பார்த்து தெரிந்து ஓடிய கொடுமை

மெரினா: 2012ல் நகைச்சுவை படமாக வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தின் பெயருக்கு ஏற்ப மெரினா கடற்கரையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு படத்தில் நடித்திருப்பார்கள். இப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று தந்தது.

கடைக்குட்டி சிங்கம்: 2018ல் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையையும், பாசத்தையும் எதிர் கொள்ளும் விதமாக கதை அமைந்திருக்கும். மேலும் இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also Read: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த அஜித் மச்சான்.. பெருமைக்கு எருமை ஓட்டிய மட்டமான வேலை

நம்ம வீட்டு பிள்ளை: 2019ல் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அண்ணன்- தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று சுமார் 70 கோடி வசூலை பெற்று தந்தது.

Trending News