உறவுகளை விட நட்பை வெளிப்படுத்தும் படங்களே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு அல்லது மூன்று கதாநாயகன் நடிப்பில் நட்பை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோன்று ஆண்களை விட பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் தோழிகளின் நட்பை பாராட்டும் விதமாக வெளிவந்த ஐந்து படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
Also Read:ஜோதிகாவை காதலித்து வளைத்து போட நினைத்த 4 ஹீரோக்கள்.. ஜோவை விட்டு வைக்காத அந்த வாரிசு நடிகர்
மகளிர் மட்டும்: நாசர், ரேவதி, ஊர்வசி மற்றும் ரோகிணி நடிப்பில் கமல் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் மகளிர் மட்டும். இப்படம் அலுவலகம் செல்லும் பெண்கள் படும் கஷ்டத்தை வெளிக்காட்டும் விதமாக வெளிவந்து பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜொள்ளுவிடும் மூக்கன் கேரக்டரை மூவரும் சேர்ந்து மொக்கை அடிப்பது போன்று படம் முழுவதும் காட்டப்பட்டிருக்கும். இதில் நாசரின் எதார்த்த நடிப்பு மக்களிடையே பரவலாக பேசப்பட்டது.
சினேகிதியே: 2000-ல் த்ரில்லர் மூவி ஆக ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த படம் தான் சினேகிதியே. இப்படத்தில் வரும் பாடல்கள் வித்யாசாகரின் இசையமைப்பில் பெரும் வெற்றியை பெற்றது. கொலை வழக்கில் மாட்டிக்கொண்ட தன் தோழியை காப்பாற்ற உண்மையான கில்லரை கண்டுபிடிக்கும் கேரக்டரில் ஜோதிகா நடித்திருப்பார். மேலும் காயத்ரி கேரக்டரில் வரும் தபு தன் தங்கையை உடல் ரீதியாக துன்புறுத்திய விக்ரமை பழிவாங்கும் விதமாக இப்படம் கொண்டு செல்லப்பட்டு இருக்கும். இதில் பெண்களின் நட்பு அருமையாக கட்டப்பட்டிருக்கும்.
Also Read:செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்
த்ரீ ரோசஸ்: 2003-ல் ரம்பா, ஜோதிகா மற்றும் லைலா காம்பினேஷனில் வெளிவந்த படம் தான் த்ரீ ரோசஸ். டைட்டிலுக்கு ஏற்ப மூணு ஹீரோயின்களும் படம் முழுக்க தன் அழகான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். வெளிநாட்டில் மியூசிக் படிக்க செல்லும் மூன்று தோழிகள் ஊர் திரும்பும் போது தன் தோழியின் கவனக்குறைவால் ஏற்படும் பிரச்சனையை எதிர்கொள்ளும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். பல ஹிட் படங்களை கொடுத்த ஹீரோயின்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி: 2017ல் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் கல்லூரி. 2000ல் நடந்த உண்மை சம்பவமான தர்மபுரி பேருந்து சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படம் கல்லூரி வாழ்க்கையை கண்முன் கொண்டு வரும் படமாகவும் மற்றும் நட்பினை வலியுறுத்தும் படமாகவும் வெளிவந்தது. இதில் இறக்கும் தருவாயிலும் தோழிகள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நட்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளை இறுதிவரை கோர்த்துக்கொண்டு எரிவது போன்ற காட்சி காண்போரை பெரிதும் பேச வைத்தது.
Also Read:80-களில் கொடிகட்டிப் பறந்த 5 நடிகைகள்.. இன்று அம்மா வேடத்தில் பட்டையைக் கிளப்புறாங்க
இன்பா ட்விங்கிள் லில்லி: 2018ல் ஆர் கே வித்யாதரன் முயற்சியில் வெளிவந்த காமெடி படம் தான் இட்லி எனப்படும் இன்பா ட்விங்கிள் லில்லி. 80-90 களில் ஹிட் படங்களை கொடுத்த சரண்யா, கோவை சரளா மற்றும் கல்பனா ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பார்கள். ஃபேமிலி மற்றும் காமெடி சப்ஜெக்ட்டாக இப்படம் கொண்டு சொல்லப்பட்டிருக்கும். வயதான பெண்மணிகளாக வரும் இக்கதாபாத்திரங்கள் தன் பேத்தியின் கஷ்டத்தை போக்க பேங்கில் பணத்தை கொள்ளையடிப்பது போன்று கதை அமைந்திருக்கும். இப்படம் தோல்வி பெற்றிருந்தாலும் மூவர் காம்பினேஷனில் வரும் காமெடி காட்சிகள் அசத்தலாக இருக்கும்.
நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இருப்பின் இதுபோன்ற படங்கள் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகின்றது. மேலும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் இப்படங்கள் இருக்கிறது.