வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெய்யை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓரளவு இன்று வரை நிலைத்து நிற்க காரணம் அட்லீ

Actor Jai: தன் சினிமா பயணத்தை சப்போட்டிங் ஆர்டிஸ்ட் ஆக தொடங்கியவர் தான் ஜெய். தன் எதார்த்தமான நடிப்பாலும், நகைச்சுவை உணர்வாளும் மக்களிடம் பெரிதும் பேசப்பட்டவர். அவ்வாறு இருப்பின் இவரின் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்களை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தமிழ் சினிமாவில் இவர் இன்று வரை ஓரளவு நிலைத்து நிற்க காரணம் இயக்குனர் அட்லீ தான். அவ்வாறு இவர் மேற்கொண்ட படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு கை கொடுத்து இருக்கிறது.

Also Read: தனுஷ் லயன் அப்பில் இருக்கும் 8 படங்கள்.. ஆல் ரவுண்டராக சுற்றும் அசுரன்

எங்கேயும் எப்பொழுதும்: 2011ல் சரவணன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் எங்கேயும் எப்போதும். இப்படத்தில் ஜெய், அஞ்சலி, அனன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று, வணிக ரீதியான வெற்றியை பெற்றது. இப்படத்தில் ஜெய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

ராஜா ராணி: 2013ல் அட்லீ இயக்கத்தில் ரொமான்டிக் படமாக வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் ஜெய், நயன்தாராவை காதலிக்கும் காட்சிகளில் சிறப்புற நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படமே இவருக்கு பேர் சொல்லும் படமாக இன்று வரை இருந்து வருகிறது.

Also Read: மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

சென்னை 600028: 2007ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த படம் தான் சென்னை 600028. இப்படத்தில் ஜெய், சிவா, பா ரஞ்சித், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஜெய்யின் எதார்த்தமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூல் ரீதியான வெற்றியை பெற்றது.

சுப்பிரமணியபுரம்: 2008ல் சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். காதலின் வலியை உணர்த்தும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ஜெய். இப்படமும் ஜெய் நடிப்பில் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இப்படம் வணிக ரீதியான வெற்றியை பெற்றது.

Also Read: உப்பு கருவாடு மனிஷா கொய்ராலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.? ரகசிய வாழ்க்கையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

அவள் பெயர் தமிழரசி: 2010ல் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய், நந்தகி, கஞ்சா கருப்பு ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் அவள் பெயர் தமிழரசி. இப்படம் கிராமத்து கெட்ட பில் அமைந்திருக்கும். மேலும் ஜெய் இப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் ரொமான்டிக் படமாக எடுக்கப்பட்ட இப்படம் போதிய விமர்சனங்களை பெறாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியை தழுவியது.

Trending News