திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஷாலை வளர்த்துவிட்ட 5 படங்கள்.. ஓஸ்ட் ஆன ஆட்டிட்யூட்

சில தயாரிப்பாளர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் ஈசியாக உள்ளே நுழைந்தாலும், அவர்களிடம் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். அப்படி தயாரிப்பாளரின் மகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த விஷால், ஆரம்ப காலத்தில் நடித்த 5 படங்களின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, சீக்கிரமே வளர்ச்சியடைந்து.

ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மோசமான அணுகுமுறையால் தற்போது எடுக்கும் படங்களில் எல்லாம் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்படி இவரை வளர்த்து விட்ட 5 படங்கள் இன்றும் ரசிகர்களை ரசித்து பார்க்க வைக்கிறது.

Also Read: எஸ் ஜே சூர்யாவுக்கு தலைவலியாக வந்த விஷால்.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா

செல்லமே: 2004 ஆம் ஆண்டு காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் விஷால், ரீமாசென், பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்த படத்தில் விஷால் தன்னுடைய யதார்த்தமான இயல்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகனாக மாறினார்

திமிரு: 2005 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான திமிரு படத்தில் அவருடன் ரீமாசென், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தருண் கோபி இயக்கிய இந்தப் படம் விஷாலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

Also Read: விஷாலுக்கு ஒரு நியாயம், சிம்புவுக்கு ஒரு நியாயமா.? உங்க அட்டகாசத்துக்கு ஒரு முடிவே இல்லையா

சண்டக்கோழி: 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் திரையரங்கில் 200 நாட்களுக்கு மேல் தாறுமாறாக ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் விஷாலுடன் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அதிரடி காதல் திரைப்படமாக வெற்றி கண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தை போல் இல்லாமல் விஷாலுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காமல் போனது.

பாண்டிய நாடு: 2013 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் ஆக்சன் படமாக வெளியான இந்தப் படத்தை விஷால் தயாரித்து நடித்திருந்தார். இந்த படமும் விஷாலின் எதார்த்தமான நடிப்பை வெளிக் காட்டி, அவருடைய ரசிகர்களுக்கு பிடித்தமான படமாகவே அமைந்தது. இதில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read: உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

நான் சிகப்பு மனிதன்: 2014 ஆம் ஆண்டு திரு இயக்கத்தில் விஷால் வித்யாசமாக காண்பித்த எந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதில் விஷாலுடன் லஷ்மி மேனன், இனியா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத வெற்றி விஷாலுக்கு கிடைத்தும், அதை தக்க வைத்துக் கொள்ளாமல் பணமோசடி, படப்பிடிப்பிற்கு சரியாக கலந்து கொள்ளாமல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி, இவருடைய அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் இவரது மோசமான அணுகுமுறை தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Trending News