5 Panchayat Scene Movie: அக்கால முதல் இக்காலம் வரை தமிழ் சினிமாவில் இடம்பெறும் கிராமத்து சப்ஜெக்ட் படங்களில், முக்கியமாக பார்க்கக் கூடியவை பஞ்சாயத்து காட்சிகள் தான். நீதி, நியாயம் தவறாது ஊரை காப்பாற்றும் பொருட்டு மேற்கொள்ளும் இது போன்ற பஞ்சாயத்துகள் இடம் பெறுவது வழக்கம்.
அவ்வாறு கிராமத்து கதை சார்ந்த படங்களில் ஒரு சில காட்சிகளில் ஆவது பஞ்சாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். அவை கதைக்கு திருப்புமுனையாகவும் அமைந்திருக்கும். அவ்வாறு பஞ்சாயத்து சீனை வைத்து ஒட்டிய 5 படங்கள் பற்றி இங்கு காண்போம்.
Also Read: முரட்டு வில்லனாக நடிப்பை மிரட்டிய சத்யராஜின் 5 படங்கள்.. இவருடைய கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையே
நாட்டாமை: 1994ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் பொன்னம்பலம் இடம்பெற்று இருப்பார். மேலும் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என இடம்பெறும் காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராய் விஜயகுமார் அதன்பின் சரத்குமார் இடம்பெறும் கெட்டப் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
சின்ன கவுண்டர்: 1992ல் உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். 18 பட்டி கிராமத்திற்கும் பஞ்சாயத்து சொல்லும் கவுண்டராய் தன் தந்தையின் வாக்கு தவறாது வாக்களித்து வரும் விஜயகாந்தின் கதாபாத்திரம் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக, கோவிலுக்கு சேர வேண்டிய இடத்தை, பொய் பத்திரம் கொண்டு எழுப்பிய பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்திருப்பார்.
Also Read: விஜய்க்கு நாடாளும் தகுதி கிடையாது.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்
படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரஜினி, சௌந்தர்யா, சிவாஜி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வழக்கம்மாறாது தன் முன்னோர்களின் ஒப்புதலை கேட்டு திருமணம் நடத்தும் முக்கிய பொறுப்பில் படையப்பா குடும்பத்தினர் இருப்பார்கள். இந்நிலையில் தன் மகளின் காதலை அறியாது, வாக்கு கொடுக்கும் ரஜினியின் சொல்லை மறுக்காது இளைய மகனின் திருமணத்தை நடத்தி வைப்பார். இது போன்ற பஞ்சாயத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர்.
முதல் மரியாதை: பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கிராமத்து தலைவர் கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மேலும் இளம்பெண்ணான ராதா மீது இவரின் உறவு குறித்து சந்தேகம் எழுப்பி பஞ்சாயத்து மேற்கொள்வார் வடிவுக்கரசி. இறுதியில் ஆம் அந்த பிள்ளைய நான் வச்சிருக்கேன் என கூறி தன் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் சிவாஜி. இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று 200 நாளுக்கு மேல் திரையில் ஓடியது.
முந்தானை முடிச்சு: கே பாக்யராஜ் இயக்கி, நடித்த படம் தான் முந்தானை முடிச்சு. இப்படத்தில் ஊர்வசி, தவக்களை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பாக்யராஜ் மீதான காதலால் ஊர்வசி மேற்கொள்ளும் நடவடிக்கை கொண்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கும். அப்பஞ்சாயத்தை கொண்டு குழந்தையை தாண்டும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் ஊர்வசி. இப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸ் வசூலை கண்டது.
தேவர்மகன்: 1992ல் பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமலஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார்கள். இப்படத்தில் பெரிய தேவர், சின்ன தேவனுக்கு இடையே எழும் பகை உணர்வு பிரச்சனை பெரிதாக பார்க்கப்படும். பஞ்சாயத்தில் இரு தரப்பினரிடையே ஏற்படும் வாக்குவாதத்தில் மாயன் கதாபாத்திரம் ஏற்கும் நாசர், பெரிய தேவரை எதிர்த்து பேசுவது போல காட்டப்பட்டிருக்கும். அவை இப்படத்தின் கதைக்கு திருப்புமுறையாக அமைந்திருக்கும்.
Also Read: கமலஹாசன் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை
விருமாண்டி: 2004ல் கமலஹாசன் இயக்கி, நடித்த படமான விருமாண்டி படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் கிராமத்து மக்களின் தண்ணீர் பஞ்சம் தீர்க்க நிலம் கேட்கும் நல்லமண நாயக்கர் இடம் கமல் வாக்குவாதம் மேற்கொள்ளும் பஞ்சாயத்து காட்சி படத்தில் பெரிதாக பேசப்பட்டது.