புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஷ்ணு விஷாலின் கேரியரை தக்க வைத்த 5 படங்கள்.. சைக்கோவை குறிவைத்து பிடித்த ராட்சசன்

Actor Vishnu Vishal Best Movies: தன் திறமையால் ஜெயித்துப் போராட வேண்டும் என்று பல படங்களின் மூலம் நடிப்பை எதார்த்தமாக கொண்டு வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். முக்கியமாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனாலயே இவருடைய கேரியரை சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

முண்டாசுப்பட்டி: ராம் குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், ராம்தாஸ் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அதாவது முண்டாசுப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் புகைப்படம் எடுத்தல் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதால் அங்கு யாரும் போட்டோ எடுத்தாலே பயப்படுவார்கள். அப்படிப்பட்ட கிராமத்திற்கு புகைப்படக் கலைஞர் போனதால் அங்கு இந்த மாதிரியான கலவரம் நடக்கிறது என்பதை கதையின் மூலமாக சொல்லப்பட்டிருக்கும்.

Also read: 2வது மனைவியாக கழுத்து நீட்டிய 5 நடிகைகள்.. அந்தரங்க உறவால் முறிந்த விஷ்ணு விஷால் திருமணம்

குள்ளநரி கூட்டம்: ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு குள்ளநரி கூட்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஹீரோவின் அப்பாவிற்கு போலீஸ் என்றாலே ஆகவே செய்யாது, அதே நேரத்தில் ஹீரோயின் அப்பாவிற்கு போலீஸ்காரர் தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் போலீசாக நினைப்பார். ஆனால் அந்த இடத்தில் சில குளறுபடியினால் பிரச்சனைகள் உண்டாகும். அதை தகர்த்தெறிந்து எப்படி போலீஸ் ஆகிறார் என்பது மீதமுள்ள கதையாகும்.

வெண்ணிலா கபடிகுழு: சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஷ்ணு விஷால் உயிரை கொடுத்து விளையாடி படத்தை வெற்றி பெற வைத்திருப்பார்.

Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?

ராட்சசன்: ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மர்மமான முறையில் தொடர்ந்து கொலை செய்யும் ஒருவரை கண்டுபிடிக்கும் விதமாக அமைந்திருக்கும். அந்த கொலைகாரருக்கு சிறுவயதில் ஏற்பட்ட அவமானங்களால் சைக்கோவாக மாறி ஒவ்வொருவரையும் சித்திரவதை செய்து கொலை செய்வார். இப்படிப்பட்டவரை குறி வைத்து பிடிப்பதில் கதை சுவாரசியமாக நகரும்.

கட்டா குஸ்தி: செல்ல அய்யாவு இயக்கத்தில் கடந்த வருடம் கட்டா குஸ்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், ரவி தேஜா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அதாவது விஷ்ணு விஷால் திருமணம் செய்திருக்கும் பெண்ணுக்கு கபடியில் ஆர்வம் இருக்கிறது. அவர் ஒரு வீராங்கனை என்பதை தெரியாமல் கல்யாணம் செய்து விடுவார். அதன் பின் தெரிந்ததும் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பை சரி செய்து எப்படி சேர்கிறார்கள் என்பதை வைத்து கதை நகரும்.

Also read: ஒரே படத்தில் நடித்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் விஷ்ணு விஷால்

Trending News