செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

நடிகர் ஜீவா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் ஈ, கோ போன்ற பல திரைப்படங்கள் அவருக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுவது இல்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் அவர் இருக்கிறார். அந்த வகையில் ஜீவாவின் வளர்ச்சியை கெடுத்த ஐந்து திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

டேவிட்: கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஜீவாவுக்கு தோல்வி திரைப்படம் ஆக அமைந்தது.

Also read:படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

முகமூடி: மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே உள்ள பலர் நடித்த இந்த திரைப்படத்தில் ஜீவா அதிக ரிஸ்க் எடுத்து நடித்து இருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் ஜீவாவுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

ஜிப்ஸி: ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரைப்படம் ஆகும். சில தடங்கல்களால் 2020 ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படம் மார்ச் மாதம் தள்ளி போனது. அதனால் இப்படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை சந்தித்து ஜீவாவுக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read:பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

திருநாள்: ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை. படத்தில் ஒரு சில பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் இப்படம் தோல்வியை சந்தித்தது.

போக்கிரி ராஜா: ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் சிபிராஜ் வில்லனாக நடித்திருப்பார். விமர்சன ரீதியாக இப்படம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

Also read:இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. ஒரு வெற்றி கிடைக்காதா என போராடும் ஜீவா

Trending News