வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வில்லனுக்கு உண்டான மரியாதையை கெடுத்துக் கொண்ட 5 படங்கள்.. அஜித்துடன் மோதி மொக்கை வாங்கிய விவேக் ஓபராய்

சினிமாவை பொறுத்தவரையில் படத்தில் வில்லன் ரோல் பெரிதாக இருந்தால்தான் தான் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சுவாரசியத்தை உருவாக்கும். படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே போன்று நெகட்டிவ் ரோலில் வரும் வில்லனை மாஸாக காட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் அநீதி என்று ஒன்று இருந்தால் தானே அதை தட்டிக் கேட்க முடியும். அதேபோன்று படத்தில் ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வகையில் வில்லன் அமைந்தால் தான் பார்ப்பவர்கள் இடையே ஒரு சலிப்பை உண்டாக்காது. அவ்வாறு இல்லாமல் வில்லன்களை மொக்கையாக காண்பித்த ஐந்து திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

சுறா: 2010ல் சங்கிலி முருகன் தயாரிப்பில் சன் பிக்சர் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் சுறா. இப்படத்தில் வரும் வில்லன் கடலோர மக்களிடம் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பது போலவும் மற்றும் அந்நிலங்களை திருப்பி தராமல் அவர்களை ஏமாற்றுபவராகவும் இருப்பார். இதில் சுறா என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். அவருக்கு வில்லனாக பாடி பில்டரை போல உடலமைப்பு கொண்ட தேவ் கில் நடித்திருப்பார். தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் கில் தமிழில் நமக்கு வில்லன் கேரக்டர் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வந்தார். ஆனால் அவரை மொக்கை வில்லனாக வெச்சி செய்த இப்படம் பெரும் தோல்வி அடைந்தது.

Also Read:சன்னியாசிகவே வாழ்ந்து வரும் முரட்டு வில்லன்.. உலகநாயகனை பதறடித்த 47 வயது மோசமான நடிகர்

சாமி 2: 2018ல் ஆக்சன் மூவியை போல எடுக்கப்பட்ட படம் தான் சாமி 2. ஆனால் இதெல்லாம் ஒரு படமா என்று கூறும் அளவிற்கு மக்களை வெறுப்படைய செய்தார் இயக்குனர் ஹரி. ஆனால் என்றும் ஒரிஜினல் போல வராது என்று ஒப்பிடும் அளவுக்கு சாமி 2 படம் அமைந்திருக்கும். இதன் முதல் பாகம் விக்ரமுக்கு ஹிட் கொடுத்த நிலையில் சாமி 2ல் விக்ரம் கேரக்டரே மொக்கையாக காட்டப்பட்டிருக்கும். மேலும் சாமியில் கோட்டா சீனிவாசனின் கேரக்டர் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அதில் பாதி கூட பாபி சிம்ஹாவை பற்றி பேசவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ரௌத்திரம்: 2011ல் ஆர் பி சவுத்ரி அவர்களின் ப்ரொடக்ஷனில் வெளிவந்த படம் தான் ரௌத்திரம். படத்தின் பெயருக்கேற்ப ஒரு ஆக்ஷன் படமாக ஜீவாவை வைத்து புது முக இயக்குனர் கோகுல் இயக்கியிருப்பார். அதில் வரும் சண்டை காட்சிகளில் ஜீவாவின் உடைகளே ஃபைட் சீனுக்கு செட் ஆகாமல் இருக்கும்.மேலும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் வில்லன் சென்றாயனை ஒரு வில்லனாகவே ஏற்க முடியாத அளவிற்கு அந்த கேரக்டர் மக்களை அதிருப்தி செய்தது. அந்த அளவிற்கு அவரின் வில்லன் கேரக்டர் முற்றிலும் முரண்பாடாக அமைந்திருக்கும்.

Also Read:ஹீரோக்களை கதறவிட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.. அமுதனாக உலக நாயகனையே பதறடித்த வில்லன்.

விவேகம்: 2017ல் அஜித், காஜல் அகர்வால் மற்றும் விவேக் ஓபராய் நடிப்பில் வெளிவந்த படம் தான் விவேகம். இதில் வில்லனாக வரும் விவேக் ஓபராய் படம் முழுக்க ஹீரோவை புகழ்ந்து பேசுவது போன்று கதை அமைந்திருக்கும். அவருக்குரிய கெத்தான ரோல் இப்படத்தில் இல்லாததால் அஜித்தையே ஹீரோவாகவும்,வில்லனாகவும் காட்டி படத்தை முடித்து இருப்பார் இயக்குனர்.

வாரிசு: அண்மையில் வெளிவந்த வாரிசு படத்தில் வில்லனாக வருவார் பிரகாஷ் ராஜ். இவர் வில்லனாக வரும் படங்கள் ஹீரோவுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கும். அந்த எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்கச் சென்றால் ஏமாந்து தான் போக வேண்டும். இப்படத்தில் வில்லனுக்குரிய நெகட்டிவ் ரோல் சிறப்பாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும். வில்லனை எதிரிகள் யார் எந்த பக்கம் கூப்பிட்டாலும் போகக்கூடிய பொம்மை போல இப்படத்தில் காண்பித்துள்ளனர். பிரகாஷ் ராஜுக்கே உரிய கிரிமினல் கேரக்டர் இன்னும் மாசாக இருந்திருந்தால் படம் பார்ப்பதற்கு மேலும் சுவாரஸ்யத்தை உண்டாக்கி இருக்கும்.

Trending News