ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

காமெடியை தாண்டி சூரி வெற்றிகண்ட 5 படங்கள்.. பரோட்டாவை பேமஸ் செய்த வெண்ணிலா கபடி குழு

தற்பொழுது  சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தனது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில், நடித்ததன் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளவர் தான் காமெடி நடிகர் சூரி. மேலும் இவர் நடிப்பில் வெளியான படங்களில் காமெடியில் பிச்சு உதறி இருப்பார். அதிலும் இவர் நடித்த படங்களில் காமெடியையும் தாண்டி தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு விதமான உணர்வினையே ஏற்படுத்தி இருப்பார். அப்படியாக காமெடியையும் தாண்டி சூரி வெற்றிகண்ட 5 படங்களை இங்கு காணலாம்.

நிமிர்ந்து நில்: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் ஜெயம் ரவி உடன் அமலாபால், சூரி, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை மக்கள் மத்தியில் நேர்மையான முறையில் நிலைநாட்ட வேண்டும், என்ற கொள்கையை மையமாக வைத்து  படமானது அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு உறுதுணையாக இருக்கும் கேரக்டரில் சூரி தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: ஹீரோவான சூரியின் அடுத்தடுத்த 4 ப்ராஜெக்ட்.. விடுதலை படத்தால் அடித்த ஜாக்பாட்

பாண்டியநாடு: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாண்டிய நாடு. இதில் விஷால் உடன் லட்சுமி மேனன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் விஷாலின் உயிர் நண்பனாக கணேசன் என்னும் கேரக்டரில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கவர்ந்திருப்பார்.

கடைக்குட்டி சிங்கம்: பாண்டியராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இதில் கார்த்தி உடன் சாயிஷா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது. இதில் சூரி, கார்த்தியின் உறவினராக இல்லாமல் தோழனாக நின்று  எல்லா விதத்திலும் உதவி செய்யும் கேரக்டரில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

Also Read: சூரிக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்புகள்.. மறைமுகமாக உதவும் தம்பி

நம்ம வீட்டு பிள்ளை: பாண்டியராஜ் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆனது அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் சூரி, பரமு என்னும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட்டாக இருக்கும் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.

வெண்ணிலா கபடி குழு: சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இதில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சூரி புரோட்டா சாப்பிடும் போட்டியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் தனது உயிர் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் வெட்டிய குழிக்குள் விழுந்து விழுந்து கண்ணீர் சிந்தும் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மனம் உருக செய்திருப்பார். 

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

Trending News