திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன 5 படங்கள்.. பாலுமகேந்திராவால் ஏற்பட்ட பெரிய மாற்றம்

80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இயக்குனர்களில் பாரதிராஜா, பாலு மகேந்திரா இவர்களின் அடுத்தடுத்த படைப்புகளில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 படங்களும் காலத்தால் அழியாத மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள். அதுவும் இவை தமிழ் சினிமாவையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படங்களாகும்.

மூடுபனி: 1980 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான காதல் மற்றும் திரில்லர் படமான இந்த படத்தில் பிரதாப் போத்தன், சோபா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின, அதிலும் “என் இனிய பொன் நிலாவே” என்ற பாடல் இளையராஜா பாடல்களின் மிகப் புகழ்பெற்ற பாடல் ஆகும்.

இப்படம் ஆங்கில திரைப்படம் ஆன “தி கலெக்டர்” திரைப்படத்தின் சாயலை கொண்டிருந்தது. இளம் வயதில் மன சிதைவுக்கு உள்ளாகி கொலைகாரனாக மாறி இருக்கும் நபரின் கதையைக் கொண்டு அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மூடுபனிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்ற அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: பொன்னியின் செல்வன் பார்த்து பாரதிராஜாவுக்கு வந்த ஆசை.. களத்தில் இறங்கிய சம்பவம்

மூன்றாம் பிறை: 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த காதல் படமான இந்த படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமலஹாசன் ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீ தேவி விஜி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

விபத்தின் காரணமாக மனநோயாளியான விஜியை ஸ்ரீனிவாசன் குணப்படுத்துவது போன்று கதைக்களம் அமைந்துள்ளது. மூன்றாம் பிறை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பணியாற்றிய கடைசி திரைப்படம் ஆகும். அதிலும் “கண்ணே கலைமானே”என்னும் சூப்பர் ஹிட் பாடல் அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடைசி பாடல் ஆகும்.

முள்ளும் மலரும்: 1978 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். படத்தில் ரஜினிகாந்த், ஷோபா சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் காளி என்னும் கதாபாத்திரத்திலும் ஷோபா காளியின் தங்கையாக வள்ளி எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் பேசிய “கெட்ட பய சார் இந்த காளி” என்ற டயலாக் இன்றளவும் ஃபேமஸ் ஆக உள்ளது. முள்ளும் மலரும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்று பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

Also Read: பாரதிராஜா, பாலா போட்டி போட்ட கதை.. மொக்க கூட்டணியில் சசிகுமாருக்கு வைக்கப்போகும் ஆப்பு

சிகப்பு ரோஜாக்கள்: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ் திரைப்படம் ஆகும். இதில் கமலஹாசன் அவர்கள் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதையும் பாரதிராஜா அவர்கள் சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் ஃபேர் விருதினையும் பெற்றுள்ளனர்.

வியாபாரத்தில் ஈடுபடுபவனாக நடித்திருக்கும் திலீப் இரவு நேரங்களில் பெண்களை கண்டால் மனநோயாளியாக மாறும் கதாபாத்திரத்தில் மிக தத்ரூபமாக நடித்த அசத்தியுள்ளார். சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

16 வயதினிலே: 1977 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கிராமத்து சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பானி என்னும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஸ்ரீதேவி மயிலு என்னும் கதாபாத்திரத்திலும் ரஜினிகாந்த் பரட்டை என்னும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: 90ளில் இயக்குனராகவும், நடிகராகவும் கொண்டாடப்பட்ட 5 நட்சத்திரங்கள்.. இரண்டிலும் முத்திரை பதித்த மணிவண்ணன்

இதைத்தொடர்ந்து இன்னும் நிறைய படங்களை சொல்லலாம். இவ்வாறு பாரதிராஜா, பாலு மகேந்திரா மகேந்திரன் பல மாற்றங்களை சினிமா துறையில் புகுத்தி, காலத்தால் அழியாத புகழை உருவாக்கியுள்ளார்கள்.

Trending News