புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஷ்ணு விஷாலை அடுத்த லெவலுக்கு வளர்த்து விட்ட 5 படங்கள்.. ஒரே படத்தால் பறக்கும் கொடி

சினிமா துறையில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். ஆனால் இவரின் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அதன் பிறகு நல்ல கதைய அம்சத்துடன் கூடிய, படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் பிஸியான நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். அப்படியாக விஷ்ணு  விஷாலை அடுத்த லெவலுக்கு வளர்த்துவிட்ட 5 படங்களை இங்கு காணலாம்.

குள்ளநரி கூட்டம்: சீறி பாலாஜி இயக்கத்தில் விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான திரைப்படம் குள்ளநரி கூட்டம். இதில் தனது காதலுக்காக போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும், என்ற தனது லட்சியத்தை நிறைவேற்றும் இளைஞராக நடித்திருப்பார். இதில் விஷ்ணு விஷால் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

Also Read: விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் நம்பர் சென்டிமென்ட்.. முதல் மனைவியை கழட்டி விட்டது இதுக்கு தானா

முண்டாசுப்பட்டி: இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு விஷ்ணு  விஷால், நந்திதா நடிப்பில் வெளியான திரைப்படம் முண்டாசுப்பட்டி. அதிலும் இப்படத்தில் தொழில்நுட்பம் என்ற ஒன்றே அறிமுகம் ஆகாத காலத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களை கண்முன்னே காட்டும்  திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் விஷ்ணு விஷால் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். 

சிலுக்குவார் பட்டி சிங்கம்: செல்வா இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் சிலுக்குவார் பட்டி சிங்கம். இதில் விஷ்ணு விஷால் உடன் ஓவியா இணைந்து நடித்திருப்பார். மேலும் இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான  விமர்சனங்களை பெற்றது.

Also Read: ஒரே படத்தில் நடித்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் விஷ்ணு விஷால்

ராட்சசன்: இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் விஷ்ணு விஷால் உடன் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் பள்ளி செல்லும் பெண்களை குறி வைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் விஷ்ணு விஷால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

கட்டா குஸ்தி: இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் கட்டாகுஸ்தி. இதில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால் நிறைய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Also Read: மீண்டும் இணையும் ஹாரர் கூட்டணி.. விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

Trending News