வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த 5 படங்கள்.. சரியான கம்பேக் கொடுத்த ராட்சசன்

விஷ்ணு விஷால் நல்ல திறமையான நடிகர் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால் நடுவில் இவர் தேர்ந்தெடுத்து படங்கள் சரியாக போகவில்லை. அதன் பின்பு சுதாகரித்துக் கொண்ட இவர் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். அந்த வகையில் விஷ்ணு விஷாலுக்கு திருப்பமுனையாக அமைந்த 5 படங்களை பார்க்கலாம்.

வெண்ணிலா கபடி குழு : சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மாரிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக நடித்த படம் வெண்ணிலா கபடி குழு. இந்த திரைப்படத்தில் அவரின் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனைவி.. இறந்த பிறகு தற்பெருமை பேசி விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்

முண்டாசுப்பட்டி : ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படம் 80,90களில் உள்ள கதைய அம்சத்தைக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் விஷ்ணு விஷால் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

இன்று நேற்று நாளை : ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நேற்று இன்று நாளை. அறிவியல் சார்ந்து எடுக்கப்பட்ட இப்படத்தில் இளங்கோ என்ற இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்து அசத்தி இருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read : 2வது பொண்டாட்டி வந்த நேரம்.. விஷ்ணு விஷால் லயன் அப்பில் இத்தனை படங்களா?

ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் அருண் என்ற போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். திரில்லர் நிறைந்த இப்படம் விஷ்ணு விஷாலுக்கு சரியான கம்பேக் கொடுத்தது.

கட்டா குஸ்தி : செல்வா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கட்டா குஸ்தி. முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் விஷ்ணு விஷால் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது.

Also Read : 2ம் மனைவியின் கண்ட்ரோலில் இருக்கும் விஷ்ணு விஷால்.. ட்வீட் போட்டு அம்பலப்படுத்திய விஜய் ஆண்டனி

- Advertisement -spot_img

Trending News