திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

Actor Surya: சில படங்களில் பாடல்களை இல்லாமல் தமிழ் சினிமாவில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. உதாரணத்திற்கு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் பாடல்களை இல்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அவ்வாறு உள்ள 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

மத கஜ ராஜா : சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, சரத்குமார், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இந்த படத்தில் விஷாலே மை டியர் லவ்வரு என்ற பாடலை பாடியிருந்தார். இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.

Also Read: தொடர் பிளாப், ஆயுர்வேத சிகிச்சை என படாத பாடுபடும் விஷால்.. அந்த ஒரு பட்டத்தை கொடுத்து பத்த வச்ச நடிகை

துருவ நட்சத்திரம் : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியான நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கௌதம் வாசுதேவ் மேனன் தவித்து வந்தார். இப்போது ரிலீஸ் செய்ய படக்குழு மும்மரம் காட்டி வருகிறது.

கெட்டவன் : நந்து இயக்கத்தில் சிம்பு, நமீதா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் கெட்டவன் படம் உருவாகி இருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் படம் தற்போது வரை வெளியாகவில்லை.

Also Read: சயின்ஸ் பிக்ஷன், வித்தியாசமான கதைகளை கொண்ட 6 படங்கள்.. சிம்புவுக்கு மறுவாழ்வு கொடுத்த மாநாடு

சர்வர் சுந்தரம் : பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்வர் சுந்தரம். ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும் வெளியாகி இருந்தது. ஆனால் படம் இப்போது வரை வெளியாகாமல் தாமதமாகி வருகிறது.

பார்ட்டி : வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சாம், சிவா, பிரேம்ஜி மற்றும் பல திரை பிரபலங்கள் நடித்திருந்த படம் பார்ட்டி. இந்த படத்தில் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து சா சா சார்லி என்ற பாடலை பாடியிருந்தார்கள். இந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றாலும் படம் வெளியாகவில்லை. இதனால் வெங்கட் பிரபு மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தார்.

Also Read: விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

Trending News