புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மகிழ் திருமேனியை அஜித் லாக் செய்ய முக்கிய காரணமாக இருந்த 5 படங்கள்.. நடிகராக எடுபடாமல் போன ரெண்டு படம்

Mahil Thirumeni 5 Movies: மகிழ் திருமேனி இயக்குனராக அவதரித்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிறது. ஆனால் தற்போது தான் இவருடைய பெயர் அனைவருக்கும் தெரிந்து சோசியல் மீடியாவில் இவரைப் பற்றி பேச்சுகள் அடிபட்டு வருகிறது. அதற்கு காரணம் இவருடைய அடுத்த படத்தை அஜித்துடன் லாக் செய்ததுதான். அதனாலையே இவருடைய பெயர் நாளாப்பக்கமும் பரவி விட்டது. அத்துடன் நடிகராகவும் 2 படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் டெடி படத்தில் டாக்டர் வரதராஜன் கேரக்டரிலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடிகராக நடித்த இரண்டு கேரக்டர்களுமே பெரிய வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் மறுபடியும் இயக்குனராக அஜித்தை வைத்து பயணத்தை தொடங்கி விட்டார். மேலும் இவர் இயக்கிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

Also read: அஜித்துக்கு ஆக்சன் சொல்லப்போகும் மகிழ் திருமேனி.. விடாமுயற்சி சூட்டிங் எப்போது தெரியுமா?

முன்தினம் பார்த்தேன்: 2010 ஆம் ஆண்டு காதல் படத்தையும் நகைச்சுவையாக கொடுத்து இவருடைய இயக்குனர் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதில் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து எடுத்திருக்கிறார். இப்படம் வசூல் ரீதியாக தோற்றுப் போனாலும், விமர்சனம் வாயிலாக இப்படம் ஓரளவுக்கு ஓடியது.

தடையறத் தாக்க: 2012 ஆம் ஆண்டு அருண் விஜய், மம்தா மோகன்தாஸ் நடிப்பில் தடையற தாக்க படத்தை இயக்கினார். இப்படம் ஆக்சன் திரில்லர் கதையை மையமாக வைத்து சுவாரசியமான கதைகளத்தை கொண்டது. முக்கியமாக இதில் அருண் விஜய்யின் நடிப்பு அனைவரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக இப்படம் லாபத்தை பெறவில்லை.

Also read: தப்ப தெளிவா பண்ணிட்டு வாயாலேயே வடை சுடாதீங்க.! அட்லிக்கு பதிலடி கொடுத்த விடாமுயற்சி மகிழ் திருமேனி

மீகாமன்: 2014 ஆம் ஆண்டு ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் அதிரடி திரில்லர் படமாக மீகாமன் வெளிவந்தது. இந்தப் படத்தின் கதை ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. அதனாலேயே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் லாபத்தை குவித்தது. அத்துடன் ஆர்யாவிற்கும் வெற்றி படங்களின் லிஸ்டில் இது இடம் பிடித்திருக்கிறது.

தடம்: 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் கிரைம் திரில்லர் படமாக மகிழ்திருமேனி தடம் என்ற படத்தை இயக்கினார். இரண்டாவது முறையாக அருண் விஜய்யுடன் கமிட் ஆகி இப்படத்தை வெற்றியுடன் கொடுத்திருக்கிறார். இதில் அருண் விஜய்யின் நடிப்புக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்தார்கள். அத்துடன் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது.

கலகத் தலைவன்: கடந்த வருடம் உதயநிதி நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக கலகத் தலைவன் வெளிவந்தது. இதில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்திருந்தார்கள். அத்துடன் சமூக கருத்துக்களை கொடுக்கும் விதமாக காற்று மாசுபடுதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் அதிர்வு தான் அஜித்திற்கு இவர் மீது நம்பிக்கையே ஏற்பட்டது. அதன் பிறகு தான் அஜித் அவருடைய விடாமுயற்சி படத்தை இவருடன் கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: AK 62 – 10 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் மகிழ் திருமேனி.. லியோவை குறிவைத்து லைக்கா போடும் ஆடு புலி ஆட்டம்

Trending News