ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினிக்கு இன்னும் கொட்டிக் கொடுக்கும் 5 படங்கள்.. டிவியில் போடுவதற்கு இவ்வளவு கோடிகளா

சூப்பர் ஸ்டார் நடிப்பில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் காலம் கடந்தாலும் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும். அப்படி ரசிக்கப்படும் படங்களுக்கு சின்னத்திரை சேனல்களிலும் அதிக மவுசு இருக்கிறது.

அந்த வகையில் ரஜினியின் திரைப்படங்களை டிவியில் பார்ப்பதற்கு கூட ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட சேனல்களும் டிஆர்பியில் லாபத்தை பெறுகிறது. அதில் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்களை டிவியில் போடுவதற்கே சம்பந்தப்பட்ட சேனல்கள் சூப்பர் ஸ்டாருக்கு பல கோடிகளை வாரி இறைத்து கொண்டிருக்கிறது. அது எந்தெந்த படங்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.

Also Read : 30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் ப்ரொபஷனல் வில்லன்.. தலைவர் 170 தரமான ஸ்கெட்ச் போட்ட சிபி சக்கரவர்த்தி

படையப்பா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்புவதற்காக ஏழு கோடிகளை சூப்பர் ஸ்டார் பெற்றுள்ளார்.

அருணாச்சலம்: சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி, ரம்பா, சௌந்தர்யா ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மிகவும் ரசித்த இந்த திரைப்படத்தை டிவியில் போடும் உரிமைக்காக சூப்பர் ஸ்டாருக்கு 4.5 கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read : பொன்னியின் செல்வன், விக்ரமுக்கு செக் வைக்கும் ரஜினி.. அதிகாரப்பூர்வமாக 2 குட் நியூஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

பாட்ஷா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மா நடித்திருப்பார். கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம் வசூலில் பல சாதனை படைத்தது. அந்த வகையில் இந்தப் படத்தை டிவியில் ஒளிபரப்புவதற்காக சூப்பர் ஸ்டாருக்கு 5 கோடிகள் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரமுகி: சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி வாசு இயக்கிய இந்த திரைப்படத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா ஆகியோர் நடித்திருப்பார்கள். மிகப்பெரும் வசூல் சாதனையை ஏற்படுத்திய இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்கில் ஓடி சாதனை பெற்றது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை டிவியில் போடுவதற்காக ரஜினிக்கு நான்கு கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

தளபதி: மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த இந்த திரைப்படம் இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை டிவியில் ஒளிபரப்புவதற்காக ரஜினிக்கு இரண்டு கோடி பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read : ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை.. சூழ்ச்சிக்கு பின்னால் இருந்த மர்ம முடிச்சு

Trending News