படத்தில் அமையும் கதையை கொண்டே அவை மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று தருகிறது. அத்தகைய கதை உண்மையில் நடந்திருந்தால் அதன் தாக்கம் அதிகமாகவே படத்தில் தெரியும். மேலும் நல்ல வரவேற்பையும் பெற்றுத் தரும்.
பண்டைய வரலாற்றை கூறும் விதமாக தமிழ் சினிமாவில் அமைந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது. அவ்வாறு உண்மை கதையை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: ஒரே மாதத்தில் ரிலீசான 4 படங்கள்.. ராஜ்கிரண் உடன் மல்லுக்கட்ட முடியாமல் தோற்றுப் போன ரஜினி
சார்பட்டா: 2021ல் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் 1960ல் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை எதிர்கொண்ட குத்து சண்டையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஆர்யாவின் அதிரடியான குத்துச்சண்டை நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இப்படம் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் மற்றும் அக்கால அரசியலை தழுவியும் படமாக எடுக்கப்பட்டிருக்கும்.
கர்ணன்: 2021ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் கர்ணன். இப்படம் 1995ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொடியங்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இரு வேறு கிராமத்தினர் இடையே ஏற்படும் பிரச்சனையை வெளிக்காட்டி இருக்கும். இப்படத்தில் தனுஷின் நடிப்பு எதார்த்தமாக இருந்தாலும் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.
வடசென்னை: 2018ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வடசென்னை. படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் 1970ல் வடசென்னை பகுதியான வியாசர்பாடி மீனவ கிராம மக்களுக்கு உதவி புரிந்த நபரை மையமாகக் கொண்டு கதை எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் தனுஷின் நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
தீரன் அதிகாரம் ஒன்று: 2017ல் எச் வினோத் இயக்கத்தில் ஆக்சன் த்ரில்லர் படமாக வெளிவந்தது. இப்படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். 1990ல் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் கார்த்திக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் 96 கோடி வசூலை பெற்று தந்தது.
Also Read: நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளையராஜா
ஜெய் பீம்: 2021ல் ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஜெய் பீம். இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் 1993 இருளர் சாதியை சேர்ந்த ஒருவரை போலீசார் துன்புறுத்தி கொலை செய்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கதை அமைந்திருக்கும். மேலும் இப்படம் சூர்யாவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. அதை தொடர்ந்து குறிப்பாக இப்படம் இவருக்கு ரீ என்ட்ரி ஆக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.