வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பவர்ஃபுல் கதாநாயகிகளுக்காக தாறுமாறாக ஓடிய 5 படங்கள்.. செம்பியில் மிரட்டிய கோவை சரளா

நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஒரு சில படங்களில் நடிகைகளும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து திரையரங்கில் தாறுமாறாக வசூலை அள்ளினர். அதிலும் சமீபத்தில் வெளியான செம்பி படத்தில் கோவை சரளா வயதான பாட்டி கெட்டப்பில் மிரட்டி இருப்பார்.

அறம்: 2017 ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேர்மையான மாவட்ட ஆட்சியரான மதிவதனி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதில் ஆழ்துளை கிணறுக்காக போடப்பட்ட குழியில் ஒரு கிராமத்து சிறுமி விழுந்து விடுவார். இந்த விபத்து தான் படத்தின் மையம். இதனை மாவட்ட ஆட்சியாளராக நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் மற்றும் உயிருடன் அந்த சிறுமியை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் நயன்தாராவின் கேரக்டர் செம போல்ட் ஆக இருக்கும்.

அருந்ததி: 2009 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான அருந்ததி திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, சோனு சூட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமின்றி அதிக வசூலையும் ஈட்டியது. மேலும் இந்த படத்தில் அருந்ததி, ஜக்கம்மா என்ற இரட்டை வேடத்தில் அனுஷ்கா நடித்திருப்பார். அதிலும் சமஸ்தான மக்களை காப்பாற்ற போராடும் ஜக்கம்மாவாக கேரக்டரில் பவர்ஃபுல்லாக நடித்திருப்பார்.

Also Read: குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஆழமாக பதித்த 5 காமெடி நடிகரின் படங்கள்.. ஒரு ஓட்டை வைத்து ஆட்டம் காட்டிய யோகி பாபு

இறுதிச்சுற்று: குத்துச்சண்டையை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம் 2016 ஆம் ஆண்டு தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. இந்த படத்தில் மாதவன் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்திலும், இவருடைய மாணவியாக குத்துச் சண்டை வீராங்கனையாக ரித்திகா சிங் நடித்தனர். இதில் மீனவ பெண்ணான எழிலரசியாக ரித்திகா சிங் பவர்ஃபுல் ஆக நடித்திருப்பார்.

அருவி: அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இதில் அதிதி பாலன், அருவி என்ற கதாபாத்திரத்தில் ஒரு புரட்சிகரமான இளம் பெண்ணாக நடித்திருப்பார். இதில் துணை இல்லாமல் இருக்கும் பெண்ணை சுற்றி இருக்கும் சமுதாயம் எப்படி எல்லாம் அணுகுகின்றது என்பதை காட்டியிருப்பார்கள்.

Also Read: நட்பை வைத்து நாங்களும் கெத்து தான் என நிரூபித்த 5 படங்கள்.. தோழிக்காக கொல கேசில் சிக்கிய ஜோதிகா

செம்பி: கமலஹாசனுக்கு கதாநாயகியாக நடித்த கோவை சரளா, அதன் பிறகு 80, 90களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். தற்போது வரை கோவை சரளாவை ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்த்த ரசிகர்களுக்கு செம்பி படத்தின் மூலம் அவர் தன்னுடைய ஆக்ரோஷமான ஆக்சனை காட்டியிருக்கிறார். இதில் தன்னுடைய பேத்தியை நாசம் செய்தவர்களுக்கு எப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கிறார் என்பதை உணர்ச்சிபூர்வமாக தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த பலரும் மிரண்டு போனார்கள். அந்த அளவிற்கு கோவை சரளாவின் பவர்ஃபுல்லான நடிப்பை பார்க்க முடிந்தது.

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படமாக வெளிவந்தது. அதிலும் பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான செம்பி படத்தில் கோவை சரளாவின் நடிப்பு மிரட்டல் ஆக இருந்தது.

Also Read: புல்லரிக்க வைத்த 5 ஹீரோயின் கதாபாத்திரங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அருவி படத்தின் 2ம் பாகம்!

Trending News