Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சியில் வெளியாகும் 5 படங்கள்.. சன் டிவி அயலானுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி

தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சியில் வெளியாகும் 5 படங்கள்.. சன் டிவி அயலானுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி

April 14 Television movies : பொதுவாக விடுமுறை நாட்களில் தியேட்டரில் சென்ற படத்தை பார்ப்பதை காட்டிலும் வீட்டிலேயே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரபல தொலைக்காட்சிகள் […]

April 14 Television movies : பொதுவாக விடுமுறை நாட்களில் தியேட்டரில் சென்ற படத்தை பார்ப்பதை காட்டிலும் வீட்டிலேயே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரபல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்ட படத்தை ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஏப்ரல் 14 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் முழுவதுமாக நகைச்சுவையாக வெளியான வடக்குப்பட்டி ராமசாமி தொலைக்காட்சியில் வெளியாகிறது. புத்தாண்டு அன்று மதியம் ஒரு மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

தொலைக்காட்சியில் வெளியாகும் மாமன்னன்

இதே தொலைக்காட்சியில் காலை ஒன்பதரை மணிக்கு அனில் ரவிபுலி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரீ லீலா மற்றும் காஜல் அகர்வால் அகியோர் நடிப்பில் உருவான பகவந்த் கேசரி படம் வெளியாகிறது.

கலர்ஸ் தொலைக்காட்சியில் வசந்த் ரவி, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான பொன் ஒன்று கண்டேன் படம் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விஜய் டிவி டிஆர்பியை அள்ளுவதற்காக பக்காவாக திட்டம் போட்டு மாமன்னன் படத்தை இறக்குகிறது. பகத் பாசில், வடிவேலு மற்றும் உதயநிதி நடிப்பில் வெளியான இந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு மாமன்னன் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.