5 films Vijay Sethupathi starred in before playing the hero: இப்போது இருக்கும் இளம் நடிகர் நடிகைகள் எல்லாம் நடித்தால், ஹீரோ ஹீரோயின் ஆக மட்டுமே நடிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது. வயதான மனிதன், திருநங்கை, ஹீரோ,வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட்டில் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் என தற்போது விஜய் சேதுபதி கொடிகட்டி பறக்கிறார். ஆனால் இவர் யாரென்று தெரியாத காலத்தில் டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்து, அதன் பின்பு தான் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு: நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வெண்ணிலா கபடி குழு படத்தில் தான், விஜய் சேதுபதியும் சைடு ரோலில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். மிக எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல லாபம் பார்த்தது. இதில் விஜய் சேதுபதி கபடி விளையாட்டு வீரராக சில நிமிடம் மட்டுமே என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரை அன்று யாருக்கும் தெரியாது, கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தில் விஜய் சேதுபதி ஒரே ஒரு டயலாக் பேசி ஒரு ஓரமாய் நின்று துணை நடிகராக நடித்தார். இதில் விஜய் சேதுபதிக்கு வில்லன் அன்புவின் அடியாள் ஆக சின்ன கேரக்டரில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நான் மகான் அல்ல: கார்த்தி- காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் கணேஷ் என்ற சிறு கேரக்டரில் சில நிமிடம் மட்டுமே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரையில் தோன்றினார். ஆனால் அந்தப் படம் வெளியான போதே விஜய் சேதுபதியை யார் என்று ரசிகர்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது நான் மகான் அல்ல படத்தை பார்த்தால், விஜய் சேதுபதி இப்படி எல்லாம் சின்ன சின்ன வேடங்களில் நடித்துதான் பெரிய வாய்ப்பை பிடித்தாரா என்று வாயடைகின்றனர்.
யாரென்று தெரியாத காலத்தில் விஜய் சேதுபதி நடித்த படங்கள்

Also Read: காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்து வரும் விஜய் சேதுபதி.. கைவசம் இருக்கும் 6 படங்கள்
ஹீரோவாக நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த 5 படங்கள்
எம் குமரன் S/O மகாலட்சுமி: இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்ததை யாரும் கவனிக்க கூட இல்லை. எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தில் கதாநாயகன் ஜெயம் ரவி பாக்சிங் காட்சிகள் சிலவற்றுள் விஜய் சேதுபதி ஓரமாக நின்று கொண்டு கைதட்டுவார். ஆனால் அந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதியை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பலே பாண்டியா: விஷ்ணு விஷால் நடிப்பில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் மண்ணை கவ்விய படம் தான் பலே பாண்டியா. இந்த படத்தில் கதாநாயகன் விஷ்ணு விஷால் ‘பாண்டியன்’ என்ற கேரக்டரில் நடித்தார். இதில் பாண்டியனின் அண்ணனாக விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்தார். இவர் விஷ்ணு விஷாலுக்கு அறிவுரை சொன்னதும், அதன் பிறகு ஜோதிடரிடம் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோசியம் பார்த்த காட்சி மூலம் ரசிகர்களிடம் விஜய் சேதுபதி கொஞ்சம் பரீட்சியமானார்.
ஹீரோவாக நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த படங்கள்

இவ்வாறு இந்த ஐந்து படங்கள் தான் விஜய் சேதுபதி யார் என்று தெரியாத காலத்தில் நடித்த திரைப்படங்கள். ஆனால் அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் கிராமத்துக் கதைக்களத்தை கொண்ட தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தான் விஜய் சேதுபதி முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமாகி அடையாளம் காணப்பட்டார். அதன் பின்பு இப்போது வில்லனாகவும் ஹீரோவாகவும் இந்திய திரையுலகை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
Also Read: காலியாகும் விஜய் சேதுபதியின் சினிமா கேரியர்.. Sk கிட்டயே நெருங்க முடியால