புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சப்போட்டிங் கேரக்டரில் அஜித் நடித்த 5 படங்கள்.. தளபதிக்கு உயிர் நண்பராக இருந்த ஏகே

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அஜித் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்கு வந்த பொழுது ஹீரோவாக நடித்திருந்தாலும் சில படங்களில் ஹீரோவுக்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படி அவர் நடித்த கெஸ்ட் ரோல் படங்களை பற்றி பார்க்கலாம்.

கல்லூரி வாசல்: பவித்ரன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கல்லூரி வாசல் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசாந்த், அஜித், பூஜா பட், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரசாந்தின் சிறு வயது நண்பராக அஜித் நடித்திருப்பார். பிறகு ஒரு நேரத்தில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு எதிரும் புதிருமாக சண்டை வருவதை தொடர்ந்து மறுபடியும் இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்: விக்ரமன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், ரோஜா, அஜித், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கார்த்திக்கின் நூறாவது படம் ஆகும். இப்படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் ரோஜாவின் உறவினராக திருமணம் செய்ய வரும் கேரக்டரில் நடித்தார்.இது வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் 250 நாட்களுக்கு மேல் கூடியது.

நீ வருவாய் என: ராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு நீ வருவாய் என திரைப்படம் வெளிவந்தது. இதில் பார்த்திபன், அஜித், தேவயானி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் மிலிட்டரியில் வேலை பார்க்கும் கேரக்டராக வந்து தேவயானி பொண்ணு பார்த்து அவருடன் திருமணம் செய்து கொள்ளும் சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்தார். பிறகு எதிர்பாராத விதமாக கார் விபத்தில் அஜித் இறந்தது போல் கதை அமைந்திருக்கும்.

Also read: துரோகங்களையும், அவமானங்களையும் சந்தித்து இறுகிப்போன அஜித்.. புட்டு புட்டு வைக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்

இங்கிலீஷ் விங்கிலீஷ்: கௌரி ஷிண்டே 2012 ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீதேவி, அடில் ஹுசைன், பிரியா ஆனந்த் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவிக்கு ஒரு மோட்டிவேஷனாக அஜித் வந்து கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்திருப்பார். அதிலும் இந்தப் படத்தில் சம்பளத்தை வாங்காமல் நட்பு ரீதியாக ஸ்ரீதேவிக்காக நடித்தார்.

ராஜாவின் பார்வையிலே: ஜானகி சௌந்தர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், இந்திராஜா, அஜித், வடிவேலு, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் உயிர் நண்பராக அஜித் நடித்திருப்பார். அத்துடன் இப்படத்தில் அஜித் தன் காதலிக்கும் பெண்ணுடன் சேர முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனாலயே விஜய்யும் காதலே வெறுக்க ஆரம்பித்து பின்பு அவருக்கு ஏற்படும் காதலில் எப்படி சேர்கிறார் என்பதை கதையாகும்.

Also read: ‘ராஜா’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் .. என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா !

Trending News