தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் நடிகர் கே பாக்யராஜ். அதிலும் தனது பங்களிப்பின் மூலம் சிறப்பான கதை அம்சத்தினையும், நடிப்பினையும் கொடுக்கக் கூடியவர் ஆவார். அதிலும் தான் இயக்கிய படங்களின் மூலமே வித்தியாசமான கதாபாத்திரங்களை உட்பகுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவரே இயக்கி நடித்த ஒரு சில படங்களில் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். அப்படியாக பாக்கியராஜ் இளிச்சவாயன் கதாபத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
அந்த ஏழு நாட்கள்: 1981 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள். இதில் பாக்கியராஜ் உடன் ராஜேஷ், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை ஆனது சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் இசையமைப்பாளராக இருக்கும் இருவர் சென்னையில் குடிபெயர்க்கின்றனர். பின்னர் அங்க நடக்கும் கலாட்டாக்களை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்தில் பாக்கியராஜ் பாலக்காட்டு மாதவன் என்னும் ஒரு அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
டார்லிங் டார்லிங் டார்லிங்: 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் எனும் திரைப்படத்தை கே. பாக்கியராஜ் இயக்கி இருந்தார். மேலும் இதில் பாக்கியராஜ் உடன் பூர்ணிமா, சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் கதையானது தொழிலதிபரின் மகள் ராதாவும் அவர்கள் வீட்டிலேயே பணிபுரியும் வாட்ச்மேன் மகனான ராஜாவும் நண்பர்களாக பழகுகின்றனர். ஒரு கட்டத்திற்குப் பிறகு படிப்பிற்காக வெளியூர் செல்லும் ராதா காலப்போக்கில் சிறுவயது ஞாபகங்களை மறந்து விடுகிறார். பின்னர் இவர்களுக்குள் நடக்கும் மாற்றங்களை பற்றி இக்கதையானது அமைந்துள்ளது. அதிலும் பாக்கியராஜ் இப்படத்தில் ராஜா என்னும் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் பல அவமானங்களை சந்திப்பவராக நடித்து அசத்திருப்பார்.
இன்று போய் நாளை வா: 1981 ஆம் ஆண்டு இளையராஜா இசையமைப்பில் வெளியான திரைப்படம் இன்று போய் நாளை வா. இதில் பாக்கியராஜ் உடன் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் இப்படத்தின் கதையானது ஒரு பெண்ணின் காதலை அடைவதற்காக இளைஞர்கள் என்னென்ன வேலைத்தனங்களை செய்வார்கள் என்பதை மையமாக வைத்து இப்படமானதாக அமைந்துள்ளது. அதிலும் பாக்கியராஜ் இப்படத்தில் பழனிச்சாமி என்னும் கதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
Also Read: இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்த பாக்யராஜின் முதல் கல்யாணம்.. மனைவி எப்படி இறந்து போனார் தெரியுமா?
இது நம்ம ஆளு: பாலகுமாரன் இயக்கத்தில் கே கோபிநாதன் தயாரிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது நம்ம ஆளு. இதில் பாக்யராஜ் உடன் ஷோபனா, கலைஞானம், குமரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் பாக்கியராஜ் இப்படத்தில் கோபால் என்னும் கேரக்டரிலும், ஷோபனா பானு என்னும் கேரக்டரிலும் நடித்திருந்தனர். அதிலும் இவர் அப்பாவி தனமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டி இருப்பார்.
அவசர போலீஸ் 100: எஸ் துரைசாமி தயாரிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவசர போலீஸ் 100. இதில் பாக்கியராஜ் உடன் மாகே ராமச்சந்திரன், கௌதமி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் கதையானது செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்று வீடு திரும்பும் ராமு தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவித்தனமான பாக்கியராஜை பயன்படுத்திக் கொள்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக வைத்து இக்கதையானது அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாக்கியராஜ் இப்படத்தில் தைரியம் இல்லாத போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் வீராசாமி நாயுடுவாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.
Also Read: குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாக்யராஜ் பட ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன சம்பவம்