வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஹீரோயின்கள் பழிக்கு பழி வாங்கும் 5 படங்கள்.. காலை சுற்றும் கருநாகமாக மாறிய ஆண்ட்ரியா சந்திரா

Actress Andrea: ஹீரோக்கள் பழிவாங்கும் காட்சிகள் நிறைந்த படங்களின் சிறப்பை காட்டிலும், தன் பொறுமையை இழந்து ஒரு கட்டத்தில் பழி தீர்த்துக் கொள்ளும் ஹீரோயின்களின் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்னும் பழமொழிக்கு ஏற்ப, அநீதியை பொறுக்காது பழிக்கு பழி வாங்கும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார்கள். அவ்வாறு ஹீரோயின்கள், பகையை மனதில் வைத்து உறவாடி பழி தீர்த்துக் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்த 5 படங்களைப் பற்றி இங்கு காணலாம்.

Also Read: வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கும் சூர்யா.. ரோலக்ஸ் பின் ஜெட் வேகத்தில் பறக்கும் கங்குவா

கோவில்பட்டி வீரலட்சுமி: 2003ல் சிம்ரனின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளிவந்த படம் தான் கோவில்பட்டி வீரலட்சுமி. இப்படத்தில் சிம்ரன் தன் சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஒரு கிராமத்தை சேர்ந்த, சாதிவெறியாளரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்படும் பெண்ணின் அவநிலையை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் சிம்ரன்.

வடசென்னை: 2018ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் மீனவ மக்களுக்கு உதவி புரியும் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருப்பார். இவரை திருமணம் செய்து கொள்ளும் ஆண்ட்ரியா, தன் கணவனின் சாவிற்கு ஞாயம் தேடுவது போன்று கருநாக பாம்பாய் படம் எடுத்து பழி தீர்த்து இருப்பார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றது.

Also Read: கேஆர் விஜயா தயாரித்து லாபம் பார்த்த ஒரே படம்.. சூப்பர் ஸ்டாரால் கிடைத்த வெகுமதி

அதிரடிப்படை: 1994ல் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அதிரடிப்படை. இந்த படத்தில் ரஹ்மான், சுமன், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். உண்மை சம்பவமான சந்திரலேகா ஐ பி எஸ் மீதான தாக்குதலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ரோஜாவின் பழிவாங்கும் கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

மாலினி 22 பாளையங்கோட்டை: 2014ல் ஸ்ரீபிரியா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். கால சூழலில் ஏற்படும் கலாச்சார சீர்கேடால் பெண்கள் ரீதியான பிரச்சனைக்கு ஆளாகுவதை, எதிர்த்து பழிக்கு பழிவாங்கும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். மாலினியாக எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் நித்யா மேனன்.

Also Read: விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

புலிக்குத்தி பாண்டி: 2021ல் முத்தையா இயக்கத்தில் லக்ஷ்மி மேனன், விக்ரம் பிரபு, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன் கணவனை நம்ப வைத்து கொலை செய்த கும்பலை, பழி தீர்க்கும் கதாபாத்திரத்தில் லஷ்மி மேனன் சிறப்புற நடித்து பாராட்டுகளை பெற்றார். மேலும் இப்படம் பார்வையாளர்கள் இடையே நேர்மறை விமர்சனங்களை பெற்றது.

Trending News